ஆறாம்பண்ணை பகுதியில் அடிக்கடி மின்சாரம் கட் ஆவதால் பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
கருங்குளம் அருகே ஆறாம்பண்ணை கிராமத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஆறாம்பண்ணை, அரபாத் நகர், ஆர்.சி கோயில் தெரு, பள்ளி கூட சிவன் கோயில் தெரு என அனைத்து தெருக்களிலும் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 500 க் கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இவர்கள் கொங்கராயகுறிச்சி, பாளையங்கோட்டை உள்பட பல பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள். தற்போது இவர்களுக்கு காலண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இவர் பாடம் பயில இயல வில்லை. தினமும் மின்சாரம் இரவு நேரங்களில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளது.
இதுகுறித்து அரபாத் நகரை சேர்ந்த அப்துல்காதர் கூறும்போது, எங்கள் பகுதியில் சுமார் 500 க் கு மேற்பட்ட மாணவ மாணவிகள் உள்ளனர். இவர்கள் காலண்டு பரிச்சைக்காக படித்து கொண்டிரு’ க்கின்றனர்.இந்த வேளையில் அடிக்கடி மின்சாரம் கட் ஆன காரணத்தினால் இவர்கள் கல்வி தடை படுகிறது. மேலும் மின்சாரம் சரிவர தரப்படாத காரணத்தினால் ஆறாம்பண்ணை பகுதிக்கு குடிதண்ணீரும் வழங்கப்படவில்லை. எனவே குடிதண்ணீர் முறையாக வழங்கவும் பள்ளி மாணவ மாணவர்கள் கல்வி பயிலவும் மின்சாரத்தினை சீராக தரவேண்டும் என்று அவர் கூறினார்.
மக்கள் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.