ஆறாம்பண்ணையில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.
ஆறாம்பண்ணை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம்-ஜமாத் மற்றும் இஸ்லாமிய இளைஞர் மன்றம் சார்பில் மிலாதுநபி விழா, இஸ்ஸத்துல் ஹைராத் மத்ரஸா ஆண்டுவிழா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் முஹம்மதுஉதுமான் சாஹிப் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் சாஹிப், இணைச்செயலாளர் பஷீர்அகமது சாஹிப், பொருளாளர் அபுல்உசேன் சாஹிப், துணைச்செயலாளர் அப்துல்கனி சாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மொன்னா முஹம்மது சாஹிப் வரவேற்றார்.
மௌலவிக்கள் ஷம்சுத்தீன், அபூபக்கர்சித்திக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க மத்ரஸப மாணவ, மாணவியர்களின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வடகரை அல் மஸ்ஜிதுல் அரபா தலைமை இமாம் அப்துல்காதிர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர்கள் அப்துல்காதர் முஹைதீன், சாகுல்ஹமீது ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்று பரிசு வழங்கினர்.
விழாவில், ஆயிஷா அரபிக்கல்லூரி முதல்வர் இமாம் முஹம்மது ஹனீபா, உலவி இமாம் மௌலவி ஷேக்அப்துல்காதிர், நிர்வாக உறுப்பினர் இமாம்அலி, கொங்கராயகுறிச்சி தலைவர் அப்துல்காதர், அராபத் நகர் ஷேக்அப்துல்காதர், மௌலவி செய்யதுஜாபர் மற்றும் இளைஞர் மன்றத்தினர், ஜமாத் நிர்வாகத்தினர், மத்ரஸா மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆறாம்பண்ணை தலைமை இமாம் அப்துல்காதிர் நன்றி கூறினார்.