செய்துங்கநல்லூர் அருகேயுள்ள ஆறாம்பண்ணை மக்கள் நலச்சங்கம் சார்பில் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் கண்காணித்திடவும், பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதியும் பஞ்சாயத்து அலுவலகம், தர்கா, பஸ் நிறுத்தம், தெருக்கள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் துவக்க விழா மற்றும் ஆறாம்பண்ணை மக்கள் நலச்சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, மக்கள் நலச்சங்க தலைவர் சைது தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர்கள் ஆறாம்பண்ணை சேக் அப்துல் காதர், கொங்கராயகுறிச்சி ஆபிதாஅப்துல்சலாம், மக்கள் நலச்சங்க பொருளாளர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ஹனீப்ஜாவூதின் வரவேற்றார்.
விழாவில், நெல்லை மாவட்ட நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முஹம்மது உசேன் கலந்துகொண்டு மக்கள் நலச்சங்க புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி, முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமரா துவக்க பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சிசிடிவி கேமரா பற்றிய முக்கியத்துவங்கள் குறித்தும் குற்றங்களை எளிதில் சீக்கிரமாக கண்டறியும் வாய்ப்புகள் என இது போன்ற சிசிடிவி பயன் பற்றிய கருத்துக்களை பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில், ஜமாத் தலைவர்கள் ஆறாம்பண்ணை முன்னாமுஹம்மது, கொங்கராயகுறிச்சி அப்துல்காதர், சப்&இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், ஜெயராம்சுப்பிரமணியம், மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் முஹம்மது ஹனீபா, முஹம்மது நிஜாம், முஹம்மது மைதீன், மீரான், ஒன்றிய கவுன்சிலர் மைமுமன்அப்துல் கரீம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இமாம்அலி, பஞ்சாயத்து துணைத்தலைவர் அப்துல்கனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


