சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். பெருவாரியாக வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.