ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு கார்பன் டேட்டிங் செய்ய 3 லட்ச ரூபாய் அமெரிக்கா மத்திய புளோரிடா தமிழ் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மதுரை ஹகோர்டில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் உலக நாகரீகத்தின் தொட்டிலான ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும், அருங்காட்சியகம் அமைக்கவேண்டும், மீண்டும்அகழாய்வு செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அவர்கள் விசாரித்து ஆதிச்சநல்லூர் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 2005ல் அகழாய்வு செய்த தியாக சத்தியமூர்த்தி நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர் ஆனார். அப்போது அவர் அகழாய்வு அறிக்கையில் 3ல் 2 பங்கை தாக்கல் செய்தார். மேலும் தமிழர்களின் பழமையை அறிய இங்கு எடுத்தபொருள்களை கார்பன்டேட்டிங் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையில் அமெரிக்க மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கத்தினை சேர்ந்த டாக்டர் சம்பத்குமார் ஆதிச்சநல்லூர் வந்து அங்குள்ள இடங்களை பார்வையிட்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை சந்தித்து பேசிய அவர் தியாக சத்தியமூர்த்தியிடமும் பேசினார். அதன் பின் கார்பன்டேட்டிங் செய்ய தேவையான பணத்தினை அமெரிக்க மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம் ஏற்றுகொள்ளும் என கூறினார்.
இதற்கிடையில் அமெரிக்கா புளோரிடாவில் முத்தமிழ் சங்க உறுபினர்கள் இந்து டெம்பிள் ஆப் வொர்லாண்டோ என்னும் இடத்தில் கூடினர். சங்க சேர்மன் டீம் மதன கோபால் தலைமை வகித்தார். செயலாளர் பாபு பாலசுந்தரம், பாபுஜி அம்பிகாபதி, ஆனந்தகுமார் வேலாயுதம், ராமசாமி ரவிச்சந்திரன், சமுண்டேஸ்வரி செல்வ மாரி, சங்கர் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் டாக்டர் சம்பத்குமார் சண்முகம், டாக்டர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு ஆதிச்சநல்லூர் கார்பன் டேட்டிங் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டு பேசினார். தற்போது தியாக சத்தியமூர்த்தி அவர்கள் தமிழர்களின் பழமை தொன்மையானது, ஆதிச்சநல்லூரின் வயது 3500 யை கடந்து இருக்கும். ஆனால் இங்கு கிடைத்த பொருள்களைகொண்டு கார்பன்டேட்டிங் செய்தால் மட்டுமே பழமையை அறிய முடியும் எனவே அதற்காக ரூ 3 லட்சம் உதவி கேட்டுள்ளார் என கூறினார்.
இதை நன்கு ஆராய்ந்த முத்தமிழ் சங்கத்தினர் அதற்கான நிதி 3 லட்சத்தினை ஓதுக்கிடதீர்மானம் நிறைவேற்றினர். அதை மதுரை ஹகோர்ட் கிளை மூலமாக சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்கான செயலாக்க கமிட்டி உருவாக்கப்பட்டது. அந்த கமிட்டியில் செல்வகுமார் சத்திய நாரயணன், அழகப்பன் முத்தப்பா அண்ணாமலை, விஜய் செந்தில் பத்பநாபன், திருமாவளவன் முருகையன், தமிழ்செல்வன் காமேஷ்கோபாலன், மற்றும் மோகன் ராஜ் கதிரவன் ஆகியோர் உள்ளனர்.
இதற்கான தகவல் கடிதத்தினை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தின் தென்கோடி தாமிரபரணிகரையில் உள்ள உலக நாகரீகத்தின்தொட்டில் நாகரீகத்தினை வெளிகொண்டு வர அமெரிக்க மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம் நிதி ஒதுக்கீடு செய்த வகைக்கு அவர்களை தமிழக மக்கள் பாராட்டினர்.