அரசர்குளம் சாலையில் தீடீர் ஓட்டை விழுந்த காரணத்தினால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தாலூகா வல்லகுளம் பஞ்சாயத்து உள்பட்ட அரசர்குளத்திற்க்கு மூலைக்கரைப்பட்டி சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை மூன்று வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு இரண்டு பாலம் அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும் போதே தரமாக இல்லை என மக்கள் புகார் செய்து வந்தனர். ஆனாலும் பாலம் சீரமைக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் உள்ள பாலத்தில் தீடீர் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டையை மறைக்க கல்களை தூக்கி அதில் வைத்துள்ளனர். இந்த இடத்தில் இருசக்கர வாகனங்கள் வந்தால் விபத்தில் சிக்கு கிறது. மேலும் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வல்லகுளத்தினை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறியபோது, எங்கள் ஊருக்கு அரசு பேருந்து, மினி பஸ் உள்பட கல்வி பேருந்து வந்து செல்கிறது. ஆனால் கடந்த வாரம் இந்த சாலையில் உள்ள பாலத்தில் தீடீர் என்று விழுந்த ஓட்டை காரணமாக அங்கே கல் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறினார்.
சாலை அமைத்து இரண்டு ஆண்டில் இதுபோன்ற ஓட்டை விழுந்த காரணத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.