செய்துங்கநல்லூரில்  போலி மது கடத்திய 2 பேர் கைது

செய்துங்கநல்லூரில் போலி மது கடத்திய 2 பேர் போலிசாரால் கைது செய்யப்படடனர்.     செய்துங்கநல்லூர் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி, முருகன் மற்றும் போலீசார் கருங்குளம் அருகே சுடலை கோயில் பகுதியில் நேற்று வாகன சோதனையில ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் கேனுடன் வந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் ஒரு கேனில் போலி மதுபானம் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது . இது குறித்து விசாரித்த போது, அவர்கள் கால்வாய் மாதாங்கோயில் […]

12--sey-2

செய்துங்கநல்லூரில் கல்லூரி மாணவிகள் சார்பில் பேரணி

செய்துங்கநல்லூரில் தூய்மை இந்தியா வேண்டி கல்லூரி மாணவிகள் பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் செய்துங்கநல்லூரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புறவு பணி நடந்தது. கல்லூரி மாணவ மாணவிகள் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றினர். அதோடு மட்டுமல்லமால் முக்கிய இடங்களில் மரக்கன்று நட்டனர். அதன் பின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது . செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை இன்ஸ்பெக்டர் […]

12--sey-3

அய்யனார்குளம் பட்டியில் மழை வேண்டி கஞ்சி கலைய ஊர்வலம்

செய்துங்கநல்லூர் அய்யானர்குளம் பட்டியில் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மன்றம் சார்பில் மழை வேண்டி கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது. அய்யனார்குளம் பட்டி மன்றத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்துக்கு மன்ற தலைவர் வண்டி மலையான் தலைமை வகித்தார். துணை தலைவர் மல்லிகா, செயலாளர் மாடத்தி, பொருளாளர் சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் வண்டி மலையான் கோயில், நம்பி சாமி கோயில் ,அம்மன் கோயில் வழியாக ஊர் சுற்றி வந்து மீண்டும் மன்றத்தினை […]

12--sey-1

செய்துங்கநல்லூரில் பக்ரீத் பண்டிகை

செய்துங்கநல்லூரில் பக்ரீத் பண்டிகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசல் திடலில் வைத்து பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் அப்துல் சமது தொழுகையை நடத்தினார். தவ்ஹீத் ஜமாத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சமீம் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். 300க்கும்மேற்பட்ட பெண்களும் 200க்கு மேற்பட்ட ஆண்களும் கலந்துகொண்டனர் . ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் சாதிக், செயலாளர் […]

12--sey-1

 செய்துங்கநல்லூரில்   அய்யா வைகுண்டர் தர்மபதி திருவிழா

செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை அய்யா வைகுண்டர் திரு நிழல் முத்து கிருஷ்ண தர்மபதி திருநாள் நடந்தது. 12 ந்தேதி ஞாயிற்று கிழமை காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணி விடை நடந்தது. 6 மணிக்கு உகப்பெருக்கு காலை 7 மணிக்கு பால் தர்மம் நடந்தது.  காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பதம் எடுத்து வருதல், சந்தன குடம் எடுத்து தங்கல் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு  தவனப்பால் தர்மம்  நடந்தது.  […]

10-sey-1

  செய்துங்கநல்லூரில்   இந்தி தேர்வு –  1254 பேர் தேர்வு எழுதினர்

செய்துங்கநல்லூரில் உள்ள சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 1254 பேர் இந்தி தேர்வு எழுதினர்.    செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தி  தேர்வு நடந்தது. இந்த தேர்வை திருச்சி இந்தி பிரசார சபா நடத்தியது. தேர்வின் தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பணியாற்றினார். ஒருங்கிணைப்பாளராக சந்திரசேகர் , ஜான் செண்பகதுரை, ஜோசப் சங்கீத மலரவன், ஜான்பால், உள்பட பலர் பணியாற்றினர். இந்தி தேர்வான பிரவேசிகா, விசாரத்தில் இரு பிரிவுகளும், பிரவீனில் இருபிரிவுகளிலும் மொத்தம் 5 பிரிவுகளிலும், […]

9-sey-4

     கருங்குளத்தில் மழை வேண்டி தாமிரபரணி கரையில் அம்மனுக்கு  மஞ்சள் நீராட்டு

கருங்குளத்தில்  மழை வேண்டி பெண்கள் தாமிரபரணிக்கு மஞ்சள் நீராட்டு நடத்தினர்.    கருங்குளம் குலசேகரநாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்து  பெண்கள் ஊர்வலமாக கிளம்பினர். இந்த ஊர்வலத்துக்கு  லெட்சுமி மகராஜன் தலைமை வகித்தார். ஊர்வலத்தினை இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சரோஜா துவக்கிவைத்தார். ஊர்வலம்  ஊர் சுற்றி தாமிரபரணி ஆற்றை அடைந்தது. அங்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. தொடர்ந்து மழைவேண்டி தாமிரபரணிக்கு மஞ்சள் நீராட்டு உள்பட பல பூஜைகள் நடந்தது. இந்த பூஜையை  குணசேகரன் […]

9-sey-3

ஸ்ரீவைகுண்டம் புதிய தாலூகா அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கவேண்டும்

ஸ்ரீவைகுண்டம் தாலூகா புதிய அலுவலகம் தற்போது ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலம் தற்போது இயங்க ஆரம்பித்து விட்டது. இந்த அலுவலகத்துக்கு கருங்குளம் ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் உள்பட அனைத்து கிராமத்தில் இருந்தும் மக்கள் வரவேண்டியதுஉள்ளது. இந்த மக்கள் பொன்னங்குறிச்சி அல்லது ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் இறங்கி சுமார் 1 கிலோ மீட்டர் நடந்து செல்லவேண்டியது உள்ளது. எனவே புதிய தாலூகா அலுவலகம் முன்பு தமிழக அரசு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

9-sey-2

கருங்குளம் – புளியங்குளம் சாலை அமைக்கப்படுமா?

ஸ்ரீவைகுண்டம் தாலூகா கருங்குளம் பஞ்சாயத்தில் புளியங்குளம், கிளாக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு செல்ல 5 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டியது உள்ளது. கருங்குளம் கிராமசாவடி வழியாக பெரியகுளம், கிருஷ்ணகுளம் கரை வழியாக சென்றால் 1 கிலோ மீட்டரில் இந்த இரு ஊரையும் அடையலாம். இந்த குளத்து கரை வழியாக சாலை உள்ளது. இந்த சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலையை பிரதமர் சாலைகள் மேம் பாட்டு திட்டத்தின் கீழ் அமைத்து தந்தால் கிராம […]

10---sey-1

  செக்காரக்குடியில் தேசிய குடற்புலு நீக்க முகாம்

 செக்காரகுடியில் தேசிய குடற்புலு நீக்க முகாம் நடந்தது. தேசிய குடற் புலு நீக்க நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்றுப் புலுவை நீக்கும் ‘அல்பண்டசோல்’ என்னும்  மாத்திரை மொத்தம் 506806 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை வழங்கும் முகாம் கீழசெக்காரகுடி அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து நடந்தது.   மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி துவக்கி வைத்தார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர்  […]