001

செய்துங்கநல்லூரில் நடிகர் விவேக் மறைவையட்டி மரக்கன்று நட்டு , உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் நடிகர் விவேக் மறைவை யட்டி அவர் படத்துக்கு சமுக இடைவெளி கடைபிடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் நினைவாக மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவது என உறுதி மொழி எடுக்கப்பட்டது. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவசாய சங்க தலைவர் குமார், வாசகர் வட்டத் துணைத்தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தி மரக்கன்று நடவேண்டும் என […]

WhatsApp Image 2021-04-17 at 6.56.21 PM

மரக்கன்று நட வேண்டும் என உறுதிமொழி

செய்துங்கநல்லூரில் சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவையட்டி மருதூர் மேலக்கால் கரையில் அவரது வயதையட்டி 59 மரக்கன்றுகளை நடப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பார்வ்தி நாதன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் தில்லை, சமூக சேவகர் சுடலைமுத்து, கதிரேசன், ராஜிபாண்டியன், கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதா டிராவல்ஸ் திருச்செல்வம், சோமசுந்தரம் என்ற குட்டி , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சின்ன கலைவாணரின் ஆசையை பூர்த்தி செய்ய தொடர்ந்து மரக்கன்று நட வேண்டும் என […]

new

சென்னை புலவர் வே. மகாதேவன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய செம்மல் என்னும் சிறப்பு விருது

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் மட ஆதின குருபூஜையை முன்னிட்டு சென்னை புலவர் வே. மகாதேவன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய செம்மல் என்னும் சிறப்பு விருதும், ரூ 5000 ம் பொற்கிழியும் வழங்கினார், குரு மகா சன்னிதானம். அதன் பின் செய்துங்கநல்லூரில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை சந்தித்தார். அவர் எழுதிய நூலான திருப்பனந்தாள் தல் மான்மியம், முதலாம் இராஜராஜனின் நினைவாலயம் ஆகிய நூல்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு கொடுத்து மகிழ்ந்தார். அவர் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி […]

IMG-20210414-WA0126

முத்தாலங்குறிச்சியில் சித்திரை விசு திருவிழா அம்மன் தாமிரபரணி ஆற்றில் நீராடல்

செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி ஸ்ரீ குணவதியம்மன் கோயிலில் சித்திரை விசுவை முன்னிட்டு அம்மன் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார். முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் நல்லாண் பிள்ளை பெற்றவள் என்ற குணவதியம்மன். இந்த கோயிலில் சித்திரை விசு திருவிழா நடந்தது. இதையட்டி முத்தாலங்குறிச்சி முக்குறுணி அரிசி பிள்ளையார் கோயிலில் இருந்து சீர் வரிசை பொருள்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அம்மன் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தமாடினார். தொடர்ந்து […]

WhatsApp Image 2021-04-12 at 4.46.45 PM

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பார்வையிட்ட கல்லூரி மாணவ மாணவிகள்.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தமிழ்த்துறை மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியை பார்வையிட வருகை தந்தனர். கல்லூரி முதல்வர் முனைவர்.அருள்ராஜ் பொன்னுதுரை அனுமதியுடன் தமிழ்த்துறைத் தலைவர் […]

001

வல்லநாடு பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு முகாம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் தலைமை வகித்தார். ஐந்தாம் வார்டு ஒன்றியக் கவுன்சிலர் முத்துராமலிங்கம், பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்புலட்சுமி ராமசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் செல்வகுமார் வரவேற்றார். முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் கபசுரகுடிநீர் வழங்கினார். சமூக ஆர்வலர் நங்கமுத்து, தங்கம் பரமசிவம், பேபி மாரியப்பன் உள்பட கலந்து கொண்டனர். சமூக […]

பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை வழங்க உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள். செய்துங்கநல்லூர் வேட்பாளர் சந்திரசேகர் பொதுமக்களிடம் பேச்சு.

பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை வழங்க உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள். செய்துங்கநல்லூர் வேட்பாளர் சந்திரசேகர் பொதுமக்களிடம் பேச்சு. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அய்யனார்குளம்பட்டி, எஸ்.என்.பட்டி கிராமங்களில் வீடு வீடாக சென்று […]

04

இடைச்சிவிளையில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் தேர்தல் பிரச்சாரம்.

இடைச்சிவிளையில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் இன்றைய தினம் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் திறந்த வேனில் நின்ற படி பொதுமக்களிடம் அவர் வாக்குகள் சேகரித்தார். அவரை அப்பகுதி […]

03

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு வருடம் தோறும் 25 பேருக்கு இலவச கல்லூரி படிப்பிற்கான முழு பொறுப்பும் நான் ஏற்றுக்கொள்கிறேன். சாத்தான்குளத்தில் பொதுமக்கள் மத்தியில் ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு வருடம் தோறும் 25 பேருக்கு இலவச கல்லூரி படிப்பிற்கான முழு பொறுப்பும் நான் ஏற்றுக்கொள்கிறேன். சாத்தான்குளத்தில் பொதுமக்கள் மத்தியில் ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 4 தினங்களாக ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு […]