15-sey-4

ஆழிகுடி ஆர்.சி.துவக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது.

ஆழிகுடி ஆர்.சி.துவக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெசி தலைமை வகித்தார். ஆசிரியர் லூயிஸ் முன்னிலை வகித்தார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தேசியகொடியேற்றி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணபதி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியை அந்தோணியம்மாள் தொகுத்து வழங்கினார். தேசியகொடியேற்றப்பட்டு, பள்ளி மாணவ மாணவிகள் […]

12-nelai-1

பாளையங்கோட்டை நூலகத்தில் நூல் வெளியிட்டு விழா

பாளையங்கோட்டை மத்திய நூலகத்தில் வைத்து மனோன்மணியன் பல்கலைகழக தொடர்பியல் துறை ஆய்வு மாணவர் கற்பகசுந்தரம் தொகுத்த 21 நூற்றாண்டு தமிழ் சினிமா, சினிமா ஆய்வு வரிசை 1 என்ற நூல் வெளியிட்டு விழா நடந்தது. இந்த நூலில் மாணவர்கள் கற்பக ராஜ், அசோக், நன்மாறன், அசோக் பால்ராஜன், கலைச்செல்வன், கற்பகசுந்தரம், பாப்பாத்தி, அபிஷ்விக்னேஷ், மகேஷ்வரி ஆகியோரின் கட்டுரையை தொகுப்பாசிரியர் கற்பகசுந்தரம் தொகுத்திருந்தார். மாணவர் கற்பக ராஜா வரவேற்றார். சதக்கப்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறை தலைவர் சௌந்தர […]

Opera-Snapshot_2019-06-03_2

http://www.muthalankurichikamarasu.com

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வளர்ச்சிக்கு ரசிகர்களின் பங்கு மிக முக்கியம் என்றால் மிகையாகாது. பஸ் கண்டக்டராக இருந்து இன்று 50 நூல் எழுதிய வரலாற்று எழுத்தாளராக ஆகி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் வாசகர்கள் தான். தேவி வார இதழில் 1976ல் துணுக்கு எழுத்தாளராக அறிமுகமாகி, பிரபல வார இதழ்களில் தொடர் எழுதி (தினத்தந்தி, தினகரன், சக்தி விகடன்). சைவசித்தாந்த நூல் பதிப்புகழகம், விகடன், தினத்தந்தி, சூரியன், தி தமிழ் இந்து (தமிழ் திசை), காவ்யா, பொன்சொர்ணா […]

0001

இந்தியாவில் பழமையான மொழி தமிழ் மொழி   வழக்கு தொடர்ந்த  எழுத்தாளருக்கு  டெல்லி தமிழ் சங்கம் பாராட்டு

 இந்தியாவின் பழமையான மொழி தமிழ் மொழி என மதுரை நீதி மன்ற நீதி பதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதற்கு காரணம்  தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த ஆதிச்சநல்லூர் வழக்கு. இந்த வழக்கு தொடர்ந்த எழுத்தாளரை பல்வேறு  தமிழ் இனத்தினர் பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்சனிலிசம் சார்பில் ‘ஆதிச்சநல்லூர் நாயகன்’ என்ற விருது வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் நூலகத்தின் சார்பில்  ‘அகழாய்வு நாயகன்’ என்ற விருது வழங்கப்பட்டது. தற்போது டெல்லியில் […]

222_15485
IMG-20190415-WA0079

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இன்; பன்ட், ராயுடு அவுட்!’ – #CWC19

உலகக்கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி […]

adichchanallur_001

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள் 3000 வருடம் பழமையானது என கார்பன் பரிசோதனை அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல்

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள் 3000 வருடம் பழமையானது என கார்பன் பரிசோதனை அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. உலக நாகரீகத்தின் தொட்டில் என போற்றப்படுவது ஆதிச்சநல்லூ நாகரீகம். சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி இதை வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் 114 ஏககர் பரப்பை கொண்டது. இந்த இடத்தில் இந்தியாவிலேயே முதல் முதலாக 1876 ஜெர்மன் நாட்டு அறிஞர் ஜாகோர் என்பவர் அகழாய்வு செய்து கிடைத்த பொருள்களை […]

IMG-20190317-WA0078-a

தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி

கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. தற்போது, இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது. மு. கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார். 1989ஆம் ஆண்டு அத்திபன் போஸ் […]

Untitled-1

2019 மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு;தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை மே 23

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியின் விக்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார். ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் […]

ரூ.2ஆயிம் சிறப்பு நிதியுதவி பெற 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற 26.02.2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ.2000ஃ-வழங்கும் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக மக்கள்நிலை ஆய்வின் அடிப்படையிலும் (PIP), வறுமை கோட்டிற்கு […]

voterslistutyt

தூத்துக்குடி மாவட்டத்தில் 14,02,300 வாக்காளர்கள்: பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்!!

தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 14,02,300 வாக்காளர்கள் உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். வாக்காளர் பட்டியலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 6,90,106 ஆண் வாக்காளர்களும், 7,12,098 பெண் வாக்காளர்களும், 96 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,02,300 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 […]