DSC_4057

புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிப்பு

புத்தக கண்காட்சியில் நெல்லை பற்றிய பாடல் எழுத உதவிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிக்கப்பட்டார். நெல்லை புத்தக கண்காட்சி துவக்கவிழா பாளை வ.உ.சி மைதானத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பழனி வரவேற்றார். ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் ராஜ லெட்சுமி குத்துவிளக்கேற்றி , திருநெல்வேலி புகழ்பாடும் ‘நெல்லை கீதம்’ என்னும் இசை நாடாவை வெளியிட்டார். பாடலை பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த ஒலிநாடாவை எழுதி இசை அமைத்த […]

DSC_9688

கல்லூரி ஆண்டு மலரில் என்னுடைய நிகழ்ச்சி பதிவு.

தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி ஆண்டு விழா மலர் வெளிவந்துள்ளது. அந்த மலரில் தமிழ்துறை சார்பில் நான் கலந்துகொண்ட நிகழ்வுகள் குறித்த பதிவுகள் கலரில் மிக அழகாக பதிவுசெய்துள்ளார்கள். மற்றொரு பக்கத்தில் நிகழ்வையும் பதிவு செய்துள்ளார்கள். இந்த பதிவுக்கு காரணமான சங்க தலைவர் திருவாளர் சபாபதி நாடாருக்கும், செயலாளர் திருவாளர் சண்முகவேல் நாடார் அவர்களுக்கும், கல்லூரி முதல்வர் முனைவர் பொன் முருகன் அவர்களுக்கும், விழா மலர் ஆசிரியரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் நிர்மலா […]

01

தோரணமலையில் 31 ந்தேதி காலையில் தை பூசத்திருவிழா

என்னுடைய ‘அத்ரி மலை யாத்திரை’ நூல் வெளியிட்ட பின்பு தோரணமலைக்கும் எனக்கு உண்டான இணைப்பு மிக அதிகமானது. ஒவ்வொரு தை பூசத்திருவிழாவிற்கும் நான் அங்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இந்த ஆண்டு அழைப்பிதழில் நான் எழுதிய வாசகங்களை கொண்டு அழைப்பிதழ் தயார் செய்துள்ளார்கள் நிர்வாகத்தார். கடையம் சுற்று பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தற்போது உலக மக்களே வியந்து போற்றும் தோரணமலையில் தைபூச இதழ் இணைப்பில் என் பெயர் வந்துள்ளது என நினைக்கும் போது என் வாழ்வில் […]

IMG-20180126-WA0008

ஸ்ரீவைகுண்டம் பேரூரில் “சுதந்திர தினம்” கொண்டாடும் விநாயகர் கோவில்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திற்கு மிக அருகே பேரூர் கிராமத்தில் அமைந்துள்ளது “தேசிய சுதந்திர செந்தி விநாயகர்” கோவில். இங்கு தான் சுதந்திர தின வழிபாடு ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது. இக்கோவிலை சுதந்திர போராட்ட தியாகி செந்தில்பெருமாள் 12.04.1948ம் ஆண்டு கட்டினார். பேரூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த செந்தில்பெருமாள் தேசத்தின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், பாரதியார், மகாத்மா காந்தி ஆகியோர் தீராத பற்றுக்கொண்டு அதன்பால் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இவரோடு […]

DSC_9694

ஆதிச்சநல்லூரில் நாசரேத் கல்லூரி மாணவர்களுடன் நான்

ஆதிச்சநல்லூரில் நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுககு வழிகாட்டியாக நான் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூர். இங்கு பல காலகட்டங்களில் ஆய்வு நடந்தது. இங்கு நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ் துறை மாணவர்கள் ஆய்வு செய்ய வந்தனர். இவர்களுக்கு வழிகாட்டுதலுக்காக நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு)கலந்து கொண்டு வழி நடத்தினேன். 2004ம் ஆண்டு ஆய்வு நடந்த இடம், புதிதாக கட்டப்பட்ட அருங்காட்சியகம், ஆற்றங்கரையில் உள்ள பாண்டு […]

DSC_0255

நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரே இடத்தில் 5 மணி நேரம் அமர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது

நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரே இடத்தில் 5 மணி நேரம் அமர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனது மைத்துனர் வல்லகுளம் கணேசன் – பிரேமா தம்பதிகளின் மகன் சுதன் & ரேவதி திருமணத்தில் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. இரவு 7 மணிக்கு திருமண வரவேற்பில் போய் அமர்ந்தேன். தொடர்ந்து அண்ணன் இட்டமொழி சந்திரன் இசைக்கச்சேரி நடந்தது. அவருக்கும் எனக்கும் கடந்த 25 ஆண்டுகளாக பழக்கம். அவர் எங்கள் குடும்பத்து நிகழ்ச்சிக்கு வந்து […]

DSC_9546

ஜமீன்கோவில்கள் நூல் விமர்சனம் – கைத்தடிக்கு பூஜை

தற்போது குளத்தூர் ஜமீன்தார் அரண்மனை திருநெல்வேலி மாநகரில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது. வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே பூஜை அறைதான் வரவேற்கிறது. தங்களது முன்னோர்களின் நினைவாக தற்போது குட்டி என்ற சண்முகசுந்தரம் அந்த பூஜை அறையை நிர்வாகித்து வருகிறார். பூஜை அறையில் 1008 உத்திராட்சங்களால் உருவாக்கப்பட்ட திரைக்கு உள்ளே சுவாமி சிலைகள் உள்ளன. அருகிலேயே பல கைத்தடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த கைத்தடிகளுக்கு தினமும் பூஜை நடக்கிறது. இதன் பழமை 200 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். கைத்தடிகள் வாக்கிங் […]

Pongal-1

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நமது muthalankurichikamarasu.com வெப்சைட் ஆங்கில புத்தாண்டில் துவங்கி 12 நாள்களை கடந்து விட்டது. உலக தமிழர்களின் ஆதரவு நமது வெப்சைட்டுக்கு மிக அதிகமாகவே கிடைத்துள்ளது. நேற்று கணக்கின் படி 22 நாடுகளை சேர்ந்த 2,257 பேர் பார்த்துள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ்,  முத்தாலங்குறிச்சி காமராசு புக்ஸ் இரண்டையும் இணைத்து உங்களை சந்தித்து வருகிறோம். ஸ்ரீவைகுண்டம் பகுதி செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.  இப்பகுதியில் வளர துடிக்கும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படைப்புகள் வரவேற்கப்படுகிறது. […]

03

பொங்கலும் – தபால் அட்டையும்

பொங்கல் விழா வந்தாச்சு.. 1988 ஆம் ஆண்டு காலங்களில் பொங்கல் வாழ்த்து கொண்டு வரும் தபால் காரரை தெருவோரம் வரை வந்து வரவேற்று , அவர்களிடம் வாழ்த்து அட்டையை பெற்று செல்வோம். வாழ்த்து அட்டையை சேகரிக்க நகரத்துக்கு வருவோம். நெல்லை சந்திப்பு, பாளை பஸ்நிலையம் , பாளை சந்தை உள்பட முக்கிய புத்தக கடையில் வகை வகையாக தபால் அட்டைகள், வாழ்த்து அட்டைகள் குவிந்து கிடக்கும். இதற்காக பள்ளி காலங்கள் பணம் சேர்த்து பஸ் ஏறி கார்டு […]

26063231_1394103814069242_7530635255783193273_o (1)

சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…

தினகரன் குழுமமான ஆன்மிக பலனில் நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) தொடராக எழுதிய ‘ஜமீன்கோயில்கள்’ என்னும் தொடர் நூலாக வெளிவந்து விட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தினகரன் அலுவலகத்திலும் இந்த நூல் கிடைக்கிறது. அருமையான கட்டமைப்பு. விலை 140 ரூபாய். இந்த நூலில் நான் முந்தைய நூல்களில் எழுதாத அபூர்வ தகவலை திரட்டி எழுதியுள்ளேன். குறிப்பாக நட்டாத்தி ஜமீன், சாத்தான்குளம் ஜமீன், சிங்கம்பட்டி ஜமீன், ஊத்துமலை ஜமீன், குளத்தூர் ஜமீன், சிவகிரி ஜமீன், சுரண்டை ஜமீன், கடம்பூர் […]