7--sey-1a

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கவின் கலைமன்றத் துவக்கவிழா

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கவின் கலை மன்ற துவக்கவிழா நடந்தது. கல்லூரி செயலாளர் அருள்தந்தை அந்தோணி சாமி தலைமை வகித்தார். கவின் கலை மன்றத் தலைவர்கள் பேராசிரியர் பிராங்கோ, பேராசிரியை ரெக்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி அனுஷா வரவேற்றார். கவின் கலைமன்ற புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. செயலராக இசக்கிராஜ், இணை செயலளராக அனுசுயா, ரம்யா ஆகியோர் பதவி ஏற்றனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மன்றத்தினை துவக்கி வைத்துபேசினார். நிகழ்ச்சியில் இராமசந்திரன் […]

new

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு வேளாக்குறிச்சி ஆதினம் பாராட்டு

முத்தாலங்குறிச்சிகாமராசு எழுதி காவ்யா பதிப்பகம்(2009) வெளியிட்ட தலைத்தாமிரபரணி, விகடன் பிரசுரம் வெளியிட்ட தாமிரபரணி கரையினிலே (2010) ஆகிய நூல்களில் புஷ்கரதிருவிழா குறித்து எழுதியுள்ளார். சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளியில் நடந்த தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு விழாவில் வேளாக்குறிச்சி ஆதினம் குருமகா சன்னிதானம் பேசும் போது இந்த நூல் குறித்தும், எழுத்தாளர் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அய்யப்பன் அவர்களும், நெல்லை முத்தமிழ் அவர்களும் (காமராசு) என்னிடம் பேசினார்கள். இதற்கிடையில் நெல்லை டவுண் சோனா மகாலில் நடந்த அழியாபதி […]

12x18-Merun-lamintion-a

நட்டாத்தி நயினார் குலசேகரன் நினைவுடன் முதலமாண்டு நினைவேந்தல்.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம் நட்டாத்தி கிராமத்தில் பிறந்தவர் நயினார் குலசேகரன். தென்குழந்தாபதி என்று வரலாற்று பெயர் பெற்றது இந்த நட்டாத்தி கிராமம். இந்த கிராமத்தில் நட்டாத்தி ஜமீன்தார் குடும்பம் மிகவும் விசேசமானது. அந்த புகழ் மிக்க வழியில் வந்தவர் திருவழுதி வைகுந்த நாடார். இவரது ஒரே சகோதரி பெரிய பொன்னம்மாள். இந்த பெரிய பொன்னம்மாளுக்கும் இதே ஊரை சேர்ந்த பெரிய மாப்பிள்ளை குலசேகர நாடாருக்கும் அந்த காலத்தில் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நல்லதொரு வாழ்க்கையும், […]

Untitled-1

கலைமாமணி சங்கரபாண்டியன்

இன்று நம்மோடு கலைமாமணி சங்கரபாண்டியன் இல்லை. ஆனாலும் அவரது புகழ் என்றுமே மறையாது. அவரது துணைவியார் சாந்தியம்மாளுக்கும், குடும்பத்தாருக்கும் இறைவன் ஆறுதல் தர வேண்டுகிறேன். தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவருக்கு விருது கொடுத்து கௌரவித்தார்கள். அதே மேடையில்இளசை மணியன், கலைமாமணி கைலாச மூர்த்தி, கலைமாமணி ஈஸ்வர மூர்த்தி அய்யா, இசையப்பாளர் இசக்கியப்பன் ஆகியோரோடு நானும் விருது வாங்கினேன். சிரித்த முகத்தோடு தம்பதிகள் இறங்கி வந்தார்களே.. இன்று சங்கரபாண்டியன் மறைந்து விட்டார் […]

IMG_20180228_221519
IMG_20180228_221550

திருப்புடைமருதூரில் வாழும் சரித்திரம் – நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்

அய்யா ரத்னவேல் பாண்டியன் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்கள். ஆனாலும் திருப்புடை மருதூர் கோபுரம் இருக்கும் வரை அவர் புகழ் மறையாது. நான் நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடரை நெல்லை தமிழ் முரசியல் எழுதும்போது 139 வது பகுதியாக ‘திருப்புடைமருதூரில் வாழும் சரித்திரம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரை பிற்காலத்தில் தலைத்தாமிரபரணி என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டது. அந்த நூல் அனைத்து நூலகங்களிலும் உள்ளது. அதில் நாம் நீதியரசர் ரத்தினவேல் […]

55847989-1

ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

ஜெ.ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி ஜெயராம்  (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016) முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராக […]

22-sey-3

பொதிகை மலை செல்ல அனுமதி கிடைக்குமா-? பக்தர்கள் கோரிக்கை

பொதிகை மலை செல்ல மே மாதம் வரை பேக்கேஜ் மூலமாக பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதிகை மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 1890 அடி உயரம் கொண்டது. அகத்திய முனிவர் தவம் செய்த இடமான அகத்தியர் கூடத்துக்கு வருடந்தோறும் கேரள அரசு அனுமதி அளித்து வருகிறது. இந்த வருடம் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை தினமும் 100 யாத்திரியர்கள் சென்று வர வனத்துறையினர் அனுமதி […]

DSC_0821

39 நாட்டை சேர்ந்த 10,384 பேர் இந்த வெப்சைட்டை பார்த்துள்ளனர்.

அன்பான நண்பர்களுக்கு, நீங்கள் நண்பர்களாக, வாசகர்களாக, என்னை நேசிப்பவர்களாக பண்முகத்தில் அன்பு காட்டிக்கொண்டிருக்கீறிர்கள். உங்கள் அனைவரையும் மறக்க முடியாது. நான் கடந்த ஜனவரி மாதம் 5 ந்தேதி என்னுடைய பெயரில் வெப்சைட் ஒன்றை ஆரம்பித்தேன். அதில் என் நூல்களை எல்லாம் இ-புக்ஸ் ஆக பெற ஏற்பாடு செய்து வந்தேன். அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி செய்திகளையும் அதில் வெளியிட்டு வந்தேன். தற்போது நாங்களே எதிர்பார்க்காதவிதமாக எங்களுக்கு இந்த வெப்சைட்டுக்கு வாசகர்கள் கிடைத்துள்ளனர். ஆம். 39 நாட்டை சேர்ந்த […]

DSC_0938

செங்கோட்டை நூலகம் என்றாலே ராமசாமி அவர்கள்.

செங்கோட்டை நூலகம் என்றாலே எழுத்தாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே சந்தோஷம் பிறக்கிறது. காரணம் அதன் நூலகர் செங்கோட்டை ராமசாமி அவர்கள். அவர் கடந்த வருடம் நாகர்கோயிலில் நடந்த புத்தக கண்காட்சியில் எனக்கு அறிமுகமானார். தொடர்ந்து என்னுடைய “தோரணமலை யாத்திரை” நூலை செங்கோட்டை நூலகத்தில் வைத்து திறனாய்வு செய்தார். அவர் திறனாய்வே மிக வித்தியாசமாக இருந்தது. ‘தோரணமலை யாத்திரை’ 30 நூலை வாங்கி அவர் மாணவ மாணவிகளிடம் கொடுத்து அதை படித்து கட்டுரை எழுத வைத்துக் கொண்டிருந்தார். என் நூலை […]

16708229_1083495121796781_5869505581695413774_n

பிரமாண்டமான கோயில் என்றால் அது பிரம்ம தேசம் தான்.

பிரமாண்டமான கோயில் என்றால் அது பிரம்ம தேசம் தான். பிரம்ம தேசம். படைப்புலக வேந்தன் பிரம்மாவின் பேரன் உரோமச மகரிஷியின் பிரமிப்பு தேசம். பிரபலமான கோயிலும் கூட, நடிகை ராதிகா அவர்களின் அண்ணாமலை சீரியல் இந்த கோயிலில் தான் படம் பிடிக்கப்பட்டது. எங்கு திரும்பினாலும் சிறப்பு . நம்மை வரவேற்கும் பிரமாண்டமான கதவு, பெரிய நந்தி, கல்லில் நாக்குடன் காணப்படும் மணி, பிரமாண்டமான மண்டபம், நின்ற நிலையில் சிவபெருமான் பிட்ஷானர் சபை. பிரம்மாவின் பேரன் உரோமச மகரிஷிவழிபட்ட […]