செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் நடிகர் விவேக் மறைவை யட்டி அவர் படத்துக்கு சமுக இடைவெளி கடைபிடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் நினைவாக மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவது என உறுதி மொழி எடுக்கப்பட்டது. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவசாய சங்க தலைவர் குமார், வாசகர் வட்டத் துணைத்தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தி மரக்கன்று நடவேண்டும் என […]
