About us

 

                              தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா முத்தாலங்குறிச்சி எனும் தாமிரபரணிகரை கிராமத்தில் திரு. சங்கரசுப்பு-திருமதி சொர்ணம்மாள் தம்பதிக்கு இவர் பிறந்தார். பெற்றோருக்கு இவர் 13ஆவது குழந்தையாவார்.

                            1967ல் முன்னால் முதல்வர் திரு.காமராஜர் அவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது இவரது குடும்பத்தில் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தனர். எனவே அவரது நினைவாக காமராஜ் என்று பெயர் வைத்தனர். 

துவக்கப்பள்ளியை முத்தாலங்குறிச்சி புனித வளன் துவக்கப்பள்ளியிலும் , உயர்நிலை வகுப்பை கிறிஸ்துராஜா உயர் நிலை பள்ளியிலும் கதீட்ரல் மேல்நிலைபள்ளியிலும்,  மேல்நிலை வகுப்பைகருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். 

                                       6.03.1987 ல் “தேவி வார இதழில்” துணுக்கு எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் மும்பைக்கு சென்று வேலை செய்தார். அப்போது அங்குள்ள “மராத்திய முரசு”, “போல்டு இந்தியா” ஆகிய பத்திரிகையில் சிறுகதை எழுதினார். தொடர்ந்து கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது நெல்லை வானொலி நேயரானார். அதில் நாடக நடிகராக முயற்சி செய்தபோது குரல் வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். விடாமுயற்சியால் நெல்லை வானொலியில் நமக்குள்ளே பகுதிக்கு கடிதம் எழுதினார். பின் வாசகராகவே வானொலியில் ஒலிபரப்பாகும் இளையபாரதம் நிகழ்ச்சியில் உரை, சிறுகதை எழுதி வாசித்தார்.
3.10.1988ஆம் நாள் இவரது “குருவை மிஞ்சிய சீடர்” எனும் உரை அறிமுகமானது. அதன் பிறகு 15 நிமிட “கண்டிஷன் கண்டிஷன்” எனும் நாடகம் ஒலிபரப்பானது. தொடர்ந்து அரை மணி நேர நாடகம் எழுதி, ஒரு மணி நேர நாடகம் எழுதும் எழுத்தாளராக உயர்ந்தார். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் (27.06.2010) நடந்த போது “என்று தணியும் இந்த தாகம்” என்னும் ஒரு மணி நேர நாடகம், அனைத்து வானொலியிலும் ஒலிபரப்பானது. இவரது நாடகமான “ரோபோ மருமகள்” எனும் அறிவியல் நாடகம் 7.10.2009 அன்றும், “மனம் சொல்லும் மௌனம்” என்ற மற்றொரு நாடகமும் நாடக விழாவில் நெல்லை வானொலி நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பானது.
இவர் ஆரம்பக் காலத்தில் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக 1987ல் மும்பை சென்று அங்கு பலசரக்கு கடையில் வேலை செய்தார் .  வாடகை வசூல் செய்யும் வேலையும்  செய்தார் . பின்னர் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்வதிலும்   ஈடுபட்டார். மதுரை தினத்தந்தியில் பிழை திருத்துபவராகவும்,தொடர்ந்து  தற்காலிகமாக தினகரன் பத்திரிகை நிருபராகவும், பேருந்து நடத்துனராகவும் பணிபுரிந்தார். தனது எழுத்தார்வத்தின் காரணமாக பத்திரிகை துறையில் கால் பதித்தார்.தனியார் மற்றும் அரசு பேருந்தில் நடத்துனராக 1988 முதல் 1995 வரை பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ மணிநாடாரிடம் உதவியாளராக வேலை பார்த்தார். இவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தின் பிரதிபலிப்பு இவரது நாவல் , சிறுகதை, கட்டுரை மற்றும் நூலில் இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் தினகரன், தமிழ்முரசு, தினத்தந்தி, தினமலர், மராத்திய முரசு, போல்டு இந்தியா, மும்பை தமிழ் டைம்ஸ், வணக்கம் மும்பை, சான்றோர் மலர், ஆல் இந்தியா ரேடியோ, நாடன் குரலோசை, சன் டிவி, வசந்த் டிவி, ஜி தமிழ், தந்தி டிவி உள்பட பல்வேறு ஊடகங்களில் சுமார் 3,050க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துள்ளார். தற்போது செய்துங்கநல்லூரில் பொன் சொர்ணா ஸ்டூடியோ, பதிப்பகம் நடத்தி வருகிறார். தினகரன், தமிழ்முரசு நாளிதழின் செய்துங்கநல்லூர் பகுதி நேர நிருபராகவும் பணியாற்றி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல்சக்தி விகடன், தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக பலன், ஆன்மிக மலர், குங்குமம் போன்ற இதழ்களில் தொடர் மற்றும் கட்டுரை எழுதி வருகிறார்.

      தற்போது ராஜகோபுரம், வணக்கம் மும்பை, சான்றோர் மலர் உள்பட பல பத்திரிக்கையில் தொடர் எழுதி வருகிறார்.
தாமிரபரணி, பொதிகை, நெல்லை தூத்துக்குடி சம்பந்தப்பட்ட கோயில்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் குறித்த கட்டுரை, சுமார் 20 க்கும் மேற்பட்ட ஜமீன்தார்கள் வரலாற்றை திரட்டி தொகுத்து எழுதி வருகிறார்.

தற்போது எழுதிய நூல்கள்-50
தொகுத்த மலர்கள் -28
நாடகங்கள்-44
தொடர்கள் -42
வாங்கிய விருதுகள் -13
நடித்த திரைப்படங்கள் – 3
இதுவரை இவர் எழுதிய படைப்புகள்3,050

 

உருவாக்கிய நகர் மலர்கள்

1. 7.06.1999 செய்துங்கநல்லூர் சிறப்பு மலர், தமிழ்முரசு
2. 11.10.1999 கருங்குளம் ஊராட்சி ஒன்றிய
உள்ளாட்சி மலர், தினகரன்
3. 12.10.1999 கருங்குளம் ஊராட்சி ஒன்றிய
உள்ளாட்சி மலர், தினகரன்
4. 27.10.1999 வல்லநாடு சிறப்பு மலர், தமிழ்முரசு
5. 10.01.2000 முறப்பநாடு மலர், தமிழ்முரசு
6. 26.02.2000 கருங்குளம் நகர சிறப்பு மலர், தமிழ்முரசு
7. 15.10.2001 முத்தாலங்குறிச்சி சிறப்பு மலர், தமிழ்முரசு
8. 4.10.2001 செய்துங்கநல்லூர் நகர சிறப்பு மலர்
தமிழ்முரசு
9. 27.11.2002 தூத்துக்குடி மாவட்ட ஆலய மலர் நூல்
தமிழ்முரசு
10. 28.10.2002 நெல்லை மாவட்ட ஆலய மலர் நூல்
தமிழ் முரசு
11. 17.01.2003 செய்துங்கநல்லூர் சிறப்பு மலர் – 2
தமிழ் முரசு
12. 12.03.2003 அம்பை நகர சிறப்பு மலர், தமிழ் முரசு
13. 14.03.2003 முதல்வர் ஜெயலலிதா கால்வாய் கிராமம் வருகை சிறப்பு மலர், தமிழ்முரசு
14. 9.12.2003 சேரகுளம் &இராமனுஜம்புதூர்
சிறப்பு மலர், தமிழ் முரசு
15. 16.10.2004 கருங்குளம் கருட சேவை, தமிழ் முரசு
16. 7.01.2005 தமிழ் முரசு பொங்கல் மலர்
17. 28.02.2005 செய்துங்கநல்லூர் நகர மலர் – 3
தமிழ் முரசு
18. 24.06.2005 சோம சுந்தர விநாயகர்
கோயில் கும்பாபிஷேக மலர்
19. 22.06.2005 முதல்வர் ஜெயலலிதா
நெல்லை வருகை சிறப்பு மலர், மக்கள் குரல்
20. 24.11.2005 தீபாவளி மலர், தமிழ்முரசு
21. 5.08.2011 கள்ளிகுளம் பனி மலர் 2011
22. 31.07 உலகத்தமிழர் மாநாடு மலர்& நாகர்கோயில்
23. 25.12.2004 கிறிஸ்துமஸ் மலர், தினகரன்
24. 10.03.2004 வல்லநாடு சாது சிதம்பர
சுவாமிகள் வரலாறு, தமிழ்முரசு
25. 13.01.2012 பொங்கல் மலர், தமிழ்முரசு
26. சதயவிழா 2010 இராசராசசோழ தேவேந்திரன்
1025ஆம் ஆண்டு விழா மலரில் காமராசு கட்டுரை
27. இந்திர விழா 2011 மலரில் கட்டுரை
28. செய்துங்கநல்லூர் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மலர் (உருவாக்க குழுத் தலைவர்)
29. ச.வே. சு அவர்களின் சிறப்பு மலர் கட்டுரை

வானொலி மற்றும் மேடை நாடகங்கள்
1. 14.10.1995 முடிச்சுமேலே முடிச்சு
மேடைநாடகம், வெட்டிகுளம்
2. 11.12.1996 கலங்க வேண்டாம்
ஆல் இந்திய ரேடியோ
3. 23.05.1996 வடதுருவம் தென் துருவம்
ஆல் இந்திய ரேடியோ
4. 15.11.1994 நம்ம பஞ்சாயத்து
5. 29.04.1997 பாதை தெரியுது
6. 16.01.1998 கண்மணியின் காதலன், வல்லகுளம்
7. 17.09.1998 கட்டபொம்மனும் கவிராயரும்
ஆல் இந்திய ரேடியோ
(இந்த நாடகம் 5 தடவை மறு ஒலிப்பு செய்யப்பட்டுள்ளது. 31.10.2003, 30.11.2001, 8.01.2002, 3.10.2002, 29.05.2002)
8. 30.09.2001 தங்கையின் வாழ்வு
மல்லல்புதுக்குளம், மேடை நாடகம்
9. 12.06.2002 தெரு முனை நாடகம்
உதவி தொடக்க கல்வி அலுவலகம்
( கொங்கந்தான்பாறை, தருவை)
10. 4.09.2002 பெண்ணின் பெருமை
மல்லல் புதுக்குளம்
11. 12.12.2003 சட்டாம் பிள்ளை பேரன்
ஆல் இந்திய ரேடியோ
(மறு ஒலிபரப்பு 23.04.2004)
12. 06.09.2006 எங்க வீட்டு மருமகள்
மல்லல் புதுக்குளம்
13. 27.06.2006 என்று தணியும் இந்த தாகம்
ஆல் இந்திய ரேடியோ
14. 14.01.2009 ரோபா மருமகள்
மாவடிபண்ணை
15. நவம்பர் 2009 ரோபா மருமகள்
சாத்தான்குளம்
16. அக்டோபர் 2008 ரோபா மருமகள்
வேப்பங்காடு
17. 31.08.2005 கன்னடியன் கால்வாய்
ஆல் இந்திய ரேடியோ
18. 14.01.2005 எங்களுக்கும் காலம் வரும்
மாவடிப்பண்ணை
19. எங்களுக்கு காலம் வரும்
ஆல் இந்திய ரேடியோ
20. 16.03. கடையநல்லூர்
ஆல் இந்திய ரேடியோ
21. 15.08 நாடகம், பண்டார புரம்
22. 25.05.1992 கண்டிஷன் கண்டிஷன்
ஆல் இந்தியா ரேடியோ
23. 03.08.1990 மேடை நாடகம்
ஆறாம்பண்ணை
24. 07.01.1991 மாமனின் காதலி
ஆறாம்பண்ணை
25. 14.05.1992 அண்ணி என் தெய்வம்
வல்லக்குளம்
26. 14.10.1992 தங்கையின் வாழ்வு
புதுக்குளம்
27. 27.07.1992 உயிர் தியாகம்
அரசர்குளம்
28. 10.05.1992 கண்டிஷன் கண்டிஷன்
நேயர் மன்றம்
29. 6.02.1991 மாமனின் காதலி
வல்லக்குளம்
30. 16.01.1993 தொழிலை மதிப்போம்
ஆல்இந்திய ரேடியோ
31. 2.04.1991 கண்டிஷன் கண்டிஷன்
ஆல் இந்திய ரேடியோ
32. நீதியின் நிழல் ( கதாநாயகி ) முத்தாலங்குறிச்சி
33. மனிதரில் மாணிக்கம்(கதாநாயகி)
முத்தாலங்குறிச்சி
34. 5.02.1995 நிறம் மாறும் உறவுகள்
ஆல் இந்திய ரேடியோ
35. 3.02.1995 மீனுவுக்கு கண் தொறந்தாச்சு
ஆல் இந்திய ரேடியோ
36. 25.03.1995 மீனுவுக்கு கண் தொறந்தாச்சு
எம்.எம்.ஸ்கூல்
37. 25.03.1995 ஆட்டோவில் வந்த வரன்
ஆல் இந்திய ரேடியோ
38. 3.08.1995 திருந்திய பின் வந்த விளைவு
ஆல் இந்திய ரேடியோ
39. 6.09.2006 எங்கள் வீட்டு மருமகள்
புதுக்குளம்
40. 17.03.1906 முடிச்சு மேலே முடிச்சு
ஆல்இந்திய ரேடியோ
மறு ஒலிபரப்பு &14.01.2006)
41. கஞ்சன் தாதன்குளம்

42. கஞ்சமாமா ஆல் இந்திய ரேடியோ
43. மனம் சொல்லும் மௌனம்
ஆல் இந்திய ரேடியோ(நாடகவிழா நாடகம்)
44. முடிச்சு மேலே முடிச்சு மேடை நாடகம் கிளாக்குளம் 13.08.2017

பல்வேறு ஊடகங்களில் வெளி வந்த தொடர்கள்

1. 5.5.11 நெல்லை மண்பேசும் சரித்திரம் 75 வாரம்
வசந்த் டிவி
2. 3.2011 நடராஜரின் பஞ்ச தலங்கள் 5 மாதம்
ஆன்மிக பலன்
3. ஏப் 2010 நவதிருப்பதி 9 மாதம்
ஆன்மிகபலன்
4. 15&18.10.2010 நவதிருப்பதி ஆலய தரிசனம்
வசந்த் டிவி
5. 30&31.10.2010 பொதிகை மலை புலன் விசாரணை
வசந்த் டிவி
6. 7&8.08.2010 சங்குமுகம் புலன் விசாரணை
வசந்த் டிவி
7. 4.09.2009 தாமிரபரணி கரையினிலே 13 வாரம்
சக்தி விகடன்
8. ஜீலை 2009 நவகைலாயம் 9 மாதம்
ஆன்மிகபலன்
9. 18.07.2009 சொரிமுத்து அய்யனார் 6 நாள்
கரண் டிவி
10. 29.07.2007 அரியநாயகிபுரம் 3 வாரம்
வீரகேசரி, இலங்கை
11. 6.05.2007 முக்கூடல் முத்துமாலை அம்மன் 2 வாரம்
வீரகேசரி, இலங்கை
12. 15.07.2007 தாமிரபரணியில் இராமயண நிகழ்வு
வீரகேசரி, இலங்கை
13. 14.01.2007 நெல்லை பேஜஸ் தொடர்
இன்டர்நெட்
14. 20.03.2005 தாமிரபரணி கரையினிலே
தொடர் தினகரன் நெட்
15. 25.05.2005 நதிக்கரையோரத்து அற்புதங்கள்
தொடர் தமிழ் முரசு
(இரண்டாம் பாகம்)
16. 31.05.2004 அதிசயம் நிகழும் அண்டார்டிகா
12 வாரம் தமிழ் முரசு
17. 27.08.2008 நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர்
மும்பை தமிழ் டைம்ஸ்
229 வாரம்
18. 3.08.2003 எப்.எம் அறிவிப்பாளர் 11 நாள்
தினகரன்
19. 25.07.2003 எப்.எம் அறிவிப்பாளர் 2 நாள்
தமிழ் முரசு
20. 30.06.2003 குறுக்குத்துறை அற்புதங்கள் 2 நாள்
தமிழ் முரசு
21. 23.06.2003 பொதிகை மலை அற்புதங்கள் 7 நாள்
தமிழ் முரசு
22. 16.03.2003 நதிக்கரையோரத்து அற்புதங்கள் 180 வாரம்
தமிழ் முரசு
(முதல் பாகம்)
23. 27.05.2001 கொன்றால் தான் விடியும் 30 வாரம்
தமிழ் முரசு
24. முத்தாலங்குறிச்சி 2 நாள் புலன்விசாரணை
வசந்த்டிவி
25. அத்ரி மலை 2 நாள் புலன் விசாரணை
வசந்த் டிவி.
26. 10.05.2012 பொதிகை மலையாத்திரை 2 நாள்
நம்பினால் நம்புங்கள் ஜீ தமிழ் டிவி
27. முத்தாலங்குறிச்சியை ஆட்டி வைக்கும் ஆவிகள் நிஜம்
சன் டிவி (ஏற்பாடு மட்டும்)
28. வணக்கம் நெல்லை மாத இதழ்
“ வியக்க வைக்கும் நெல்லை சீமை”
29. சித்தர்கள் வரலாறு & சித்தன் முரசு
30. அத்ரி மலை யாத்திரை & தினகரன் ஆன்மிக மலர்
50 வாரம்
31. மலை நாட்டு திருப்பதி புகைப்பட கலைஞராக
தினகரன்
32. நம்ம ஊரு தெய்வம், தினகரன் ஆன்மிக மலர்
( புகைப்பட கலைஞர்)
32. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
வணக்கம் மும்பை(150 வாரங்களை கடந்து)
33. எனது மலை பயணம் சான்றோர் மலர் (36 மாதங்களை கடந்து)
33. பூவே புனிதா நாடான் குரலோசை
34. நதி வெளி பயணம் பயணி மாத இதழ்
35. பிரபலங்களின் நேர்முகம்
காவ்யா காலாண்டு இதழ்
36. ஜமீன் கோயில்கள் ஆன்மிக பலன்

37. சிறுதெய்வ வழிபாடு – ராஜகோபுரம் மாத இதழ்

38. அதிசய சித்தர்கள் தினத்தந்தி செவ்வாய் கிழமை தோறும்

39. பஞ்ச பூத ஸ்தலங்கள் ஆன்மிக பலன்
40. நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2 வணக்கம் மும்பை
41. மரம் நடும் மாமனிதர் வணக்கம் மும்பை
42. முத்து கிளி தொடர் கதை சான்றோர் மலர்