ஆதிச்சநல்லூர்,சிவகளை, கொற்கையில் மீண்டும் அகழாய்வு தொடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை தொல்லியல் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கம்.

தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் தொடங்கியது.

இந்த அகழாய்வு பணியில் சிவகளையில் கல் வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகளும், அதேபோல் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 2700 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமான அமைப்பும், சங்க இலக்கியத்தில் கூறப்படும் கொற்கையின் சங்கறுக்கும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டு பிடிககப்பட்டன. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பல அபூர் வ தகவல்கள் கிடைக்கும் என ஆர்வத்துடன் இருந்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமடைந்த காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் கடந்த மே 10 ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் 1மாதம் கழித்து ஜுன் 10 ந்தேதி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இதற்காக முதல் கட்டமாக அகழாய்வு செய்யப்படும் இடங்கள் மற்றும் குழிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தபகுதியில் மாநில அரசு அகழாய்வு செய்ய வருகிற செப்டம்பர் மாதம் வரைதான் அனுமதி கொடுத்துள்ளார்கள். அதற்குள் வேகமாக பணிகளைசெய்ய வேண்டும் என தொல்லியல் அதிகாரிகள் வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, கொரோனா காரணமாக கடந்த 2 வருடகாலமாகவே தூத்துககுடி மாவட்டத்தில் நடைபெறும் அகழாய்வு பணி தாமதப்படுத்தப்பட்டே வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் காட்டிய 37 இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். அதன் படி மத்தியஅரசு உத்தரவுடன் மாநில அரசு இதற்காக பணம் ஓதுககீடு செய்து, அதற்கான அதிகாரிகளையும் நியமித்து விட்டனர். ஆனால் அதற்கான அகழாய்வு பணி துவங்க வில்லை. தற்போது வசவப்பபுரம் பகுதியில் நிறைய முதுமக்கள்தாழிகள் மழையினால் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக வசவப்பபுரம் பகுதியில் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்யவேண்டும். கொங்கராயகுறிச்சியில் மணலில் புதைந்து கிடககும் ஆலயங்களை நவீன கருவி மூலம் தேடி பார்க்க வேண்டும். என்று அவர் கூறினார்.

விரைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 37 இடங்களில் ஆய்வு நடைபெற ஏற்படஏற்பாடு செய்யபபட்டு வருகிறது. என்கிறார் கள் அதிகாரிகள் அதற்கான ஆய்வை செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து தரவேண்டும கடந்த ஆண்டு அகழாய்வு செய்த ஆய்வின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பாக்ஸ் போடலாம்.
ஆதிச்சநல்லூரில் தற்போது நடைபெறும் ஆய்வில் பெரிய அளவில் பொருள் கிடைக்க வில்லை மேலும் ஆதிச்சநல்லூரில் உள்ள 144 ஏக்கரில் அகழாய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் உலக அளவில் மிகப்பெரிய அருங்காட்சியகம் வரும் போது 114 ஏக்கருக்குள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் எனவே தொடர்ந்து உள்ளே ஆய்வு செய்ய இயலாது என கூறி வருகிறார்கள். எனவே இங்கு தொடர்ந்து அகழாய்வு நடைபெறுமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் மத்திய அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணி இடம் தேர்வு செய்ததோடு அப்படியே கிடப்பில் கிடக்கிறது . எனவே அந்த பணியை உடனே முடுக்கி விடவேண்டும் என்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.