கருங்குளம் பகுதியில் கார்சாகுபடி செய்ய ஆர்வம் காட்டாத விவசாயிகள். விவசாயம் செய்ய வேளாண் அலுவலர் அறிவுறுத்தல்

கருங்குளம் பகுதியில் மருதூர் அணையில் இருந்து மருதூர் மேலக்கால் கீழக்காலில் கார்சாகுபடிககு தண்ணீர் திறந்து விடப்பட்டுளளது. இதனால் விவசாயிகள் 25 வருடங்களுக்கு பிறகு கார்சாகுபடிக்கு தாயராகி வருகிறார்கள். அவர்களுக்கு வேளாண் அதிகாரி விவசாயம் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

தாமிரபரணி நதி பாயும் பகுதியில் கார் சாகுபடி ஜீன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 31 ம் தேதி வரை நடைபெறும். இதில் வருடம் தோறும் திருநெல்வேலி மாவட்டத்தில் கார், பிசான சாகுபடி நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் அணையில் தண்ணீர் இருப்பதை பொறுத்து கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படும். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த கார் சாகுபடி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால், கிழக்கால் பாசன விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தாமிரபரணி ஆற்றில் கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 25 ஆண்டுகளுக்கு பின்னர் மருதூர் மேலக்கால், கீழக்கால் பகுதிக்கு கார்சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த பகுதி விவசாயிகளுககு வயிற்றில் பால் வார்ப்பது போல் இருந்தது.

மேலக்கால் மூலமாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும், கீழககால் வழியாக சுமார் 8 ஆயிரம் ஏககர் பாசன பரப்பும் பயன்பெரும். கடந்த 25 ஆண்டுகளாக பிசான சாகுபடியை மட்டுமே பயன்படுத்தி வந்த விவசாயிகள் இந்த ஆண்டு கார் சாகுபடிக்கு தாயராகி வருகிறார். விவசாயிகள் தற்போது விவசாய பணிகளை மிகவும் உற்சாகமாக ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக தற்போது தங்கள் வயல்வெளிகளை உழவு செய்யும் பணியையும், களைகளை அகற்றும் பணியையும் வேகமாக ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவர்களுககு போதிய விதை நெல், உரம் கிடைக்குமா என சந்தேகம் கிளம்பி வந்தது.

இதுகுறித்து நாட்டார்குளத்தினை சேர்ந்த விவசாயி தங்கராஜ் கூறும் போது, 25 ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் பகுதியில் உள்ள குளங்களுக்கு மருதூர் மேலக்காலில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் தற்போது விவசாய பணிகளை வேகமாக துவங்கியுள்ளோம். இதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவசாய பணிகளுக்கு முறையாக விதைகள் மற்றும் இடு பொருட்களான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கொரோனா காரணமாக விவசாயிகள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்னர். எனவே 50 சதவீத விவசாயிகள் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. எனவே விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், உரம் மற்றும் அதை வாங்க கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கருங்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் இசக்கியப்பனிடம் கேட்ட போது,

நீண்ட காலத்திற்கு பின்னர் இந்த பகுதிக்கு கார் சாகுபடிக்காக தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தற்போது விவசாய பணிகளை வேகமாக ஆரம்பித்துள்ளனர். வேளாண்மைத்துறையில் கருங்குளம் ஒன்றிய விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வல்லநாடு மற்றும் கருங்குளம் வேளாண்மை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. இயற்கனவே பதிவு செய்த விவசாயிகள் தங்களது ஆதார் கார்டை காண்பித்து விதை நெல்லை வாங்கி கொள்ளலாம். மேலும் புதிதாக விவசாயம் செய்யும் விவசாயிகளும் தங்கள் பெயர்களை பதிவு செய்து விதை நெல்லை வாங்கி கொள்ளலாம். தற்போது உள்ள சூழலில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளதால் தண்ணீரை சேமிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடியை பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் கோ&51, அம்பை&16 போன்ற நெல்லை சாகுபடி செய்ய விரும்புகிறார்கள். தற்போதைய நிலவரப்படி கோ&51 3500 கிலோவும், அம்பை &16 12500 கிலோவும் வல்லநாடு மற்றும் கருங்குளம் வேளாண்மை அலுவலகத்தில் இருப்பு உள்ளது. மேலும் விவசாயிகள் கலை பறிக்கவும் குறைந்த இடுபொருள்களை பயன்படுத்தும் விதமாக திருத்திய நெல் சாகுபடியை பயன்படுத்த வேண்டும்.இதனால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். அதுபோல் ரசாயான உரங்களும் இந்த பகுதியில் தனியார் கடைகள் மூலமாக வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் கார் சாகுபடியை தயக்கமில்லாமல் ஆரம்பிக்கலாம் என்றார்.
நீண்ட நாள் கழித்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்தாலும் கூட 100 சதவீதம் விவசாயிகள் சாகுபடி செயய ஆர்வம் காட்டவில்லை. எனவே விவசாயிகளுக்கு விவசாயததின் மீது ஆர்வம் காட்ட போதிய மானிய கடனுதவி வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.