செய்துங்கநல்லூர் தொழில் அதிபர் டாக்டர் ஏ.எஸ்.பி. பால்ராஜ் மரணம்

செய்துங்கநல்லூர் தொழில் அதிபர் டாக்டர் ஏ.எஸ்.பி. பால்ராஜ் மரணமடைந்தார். செய்துங்கநல்லூரை அடுத்த நாட்டார்குளத்தினை சேர்ந்தவர் டாக்டர் பால்ராஜ். இவர் ஏ.எஸ்.பி குழுமம் மூலமாக விட்டிலாபுரத்தில் இயங்கும் கிராண்டிக்ஸ் வாட்டர், முத்தாலங்குறிச்சியில் இயங்கும் ஏ.எஸ்.பி சேம்பர், கிருஷ்ணாபுரத்தில் இயங்கும் ஏ.எஸ்.பி. மணி திருமணமண்டபம், மற்றும் புஷ்பா ஹோட்டல் உரிமையாளர். தனது வாலிப வயதில் அயராது உழைத்து சாதாரண கூலித்தொழிலாளியா க இருந்து இன்று மிகப்பெரிய தொழிலதிபரானாவர். இவரது உழைப்புக்காக மலோசியா பல்கலைகழகம் சார்பில் இவரககு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இதற்கிடையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து இவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அங்கு அவர் கொரோனா நோயில் இருந்து குணமாகி விட்டார். ஆனால் தீடீரென்று அவருக்கு மாரடைப்பு எற்பட்டது. இதனால் அவர் நேற்று முன்தினம் (9ந்தேதி) மதியம் 11 மணிக்கு மரணமாகி விட்டார்.

இவரது உடல் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் விட்டிலாபுரம் ஏ.எஸ்.பி தொழில் வளாகத்தில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருடைய இழப்பு தொழிலாளர்கள் மத்தியிலும் உறவினர்கள் மற்றும் செய்துங்கநல்லூர் சுற்று பகுதி மக்களிடையே பெரும்எசோகத்தினை ஏற்படுத்தியது