செய்துங்கநல்லூரில் சமூக வளைதலங்களில் நடைபெறும் குற்றங்களை தடுக்க போலிசார் விழிப்புணர்வு நடத்தினர்.

செய்துங்கநல்லூரில் சமூக வளைதலங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் இன்றை தினம் நடந்தது.

செய்துங்கநல்லூர் அண்ணாசிலை அருகில் நடந்த இந்த முகாமிற்கு சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் சுஜீத் ஆனந்த விழிப்புணர்வு குறித்து பேசினார்.

சமூக வளைதலங்களில் வரும் கெட்ட தகவல்களில் இருந்து எப்படி தப்பித்துக்கொள்வது, குழந்தைகளை எப்படி பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வக்கீல் தில்லை, கொம்பையா உள்பட பொதுமக்களும், போலிசாரும் கலந்து கொண்டனர்.