செய்துங்கநல்லூரில் உலக சுற்றுச்சுழல் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்று நட்ட போலிசார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல்நிலைய வளாகத்தில் உலக சுற்றுசுழல் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திலும், காவலர்கள் குடியிருப்பிலும் சுமார் 10க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை சப் இன்ஸபெக்டர்கள் கருத்தையா, முத்துராமன், ரவிக்குமார் உள்பட போலிசார் நட்டனர்.