ஸ்ரீவைகுண்டம் மெயின்ரோட்டில் ஆட்டோ மீது மஹிந்திரா வாகனம் மோதி 3- பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்செந்தூர் வடக்கு ஆத்தூர் பரதர் தெருவை சேர்ந்தவர் சேவியர் இவரது மகன் சாந்தாகுருஸ் வயது (51), இவர் ஆத்தூரில் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

மேலும் தெற்கு ஆத்தூர் கீழதெருவை சேர்ந்தவர் ஜெய்லானி இவரது மகன் அமீர் சுல்தான் வயது(66), இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவரை சாந்தாகுரூஸ் ஆட்டோவில் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆமீர் சுல்தானின் அண்ணன் மகன் ரிஸ்வான் ஆகிய மூவரும் ஆத்தூரில் இருந்து ஆட்டோவில் நேற்று முன்தினம் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருநெல்வேலி டவுண் தர்மராஜ் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் பொன்சிங் திருநெல்வேலியில் இருந்து மகேந்திரா லோடு வாகனத்தில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவைகுண்டம் அருகில் வரும் போது திருச்செந்தூர்-திருநெல்வேலி மெயின் ரோட்டில் எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் சாந்தாகுரூஸ் மற்றும் அமீர்சுல்தான், அமீர் சுல்தானின் அண்ணன் மகன் ரிஸ்வான் ஆகியோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் போலீஸார் விரைந்து சென்றனர். படுகாயமடைந்த மூன்று பேரையும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.