கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் இரண்டு பேர் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர். ஸ்ரீவைகுண்டம் சிவகாமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகன் மாரியப்பன் வயது (46), வடக்கு தோழப்பன் பண்ணை மேடை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் கந்தசாமி வயது (37), ஆகிய இருவரும் நேற்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிபதி தமிழரசு இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.