வல்லநாடு பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு முகாம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் தலைமை வகித்தார். ஐந்தாம் வார்டு ஒன்றியக் கவுன்சிலர் முத்துராமலிங்கம், பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்புலட்சுமி ராமசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் செல்வகுமார் வரவேற்றார். முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் கபசுரகுடிநீர் வழங்கினார். சமூக ஆர்வலர் நங்கமுத்து, தங்கம் பரமசிவம், பேபி மாரியப்பன் உள்பட கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் தங்கராஜ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமலை முத்துவேல் , மருத்துவமனை பணியாளர்கள் வேம்பன், மகேந்திரன் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்த மருத்துவ பிரிவு செய்திருந்தது.