பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை வழங்க உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள். செய்துங்கநல்லூர் வேட்பாளர் சந்திரசேகர் பொதுமக்களிடம் பேச்சு.

பெண்கள் முன்னேற்றத் திட்டங்களை வழங்க உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள். செய்துங்கநல்லூர் வேட்பாளர் சந்திரசேகர் பொதுமக்களிடம் பேச்சு.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அய்யனார்குளம்பட்டி, எஸ்.என்.பட்டி கிராமங்களில் வீடு வீடாக சென்று டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் கிடைத்திட, அனைத்து குடும்பங்களுக்கும் இணை வசதியுடன் கூடிய ஒரு மடிக்கணினி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட, மாவட்டங்கள் தோறும் தொழில் திறன் மேம்பாட்டு மய்யங்கள், விவசாயத்தை வேளாண்துறையை சீரமைத்திடவும், பெண்களுக்கு தரமான கல்வி மற்றும் மருத்துவம் வழங்கவும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.
வேட்பாளருடன் சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் பெருமாள், ஒன்றிய பிரதிநிதி ராஜமணிகண்டன், தொண்டரணி ஜெபஸ்டின், சக்திவேல், மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் சுப்பையா, பேச்சாளர் மாயாண்டி உள்பட பலர் உடன் சென்றனர்.