சாத்தான்குளம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சாத்தான்குளம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் பகுதியில் உள்ள பொத்தகாலன்விளை, போலையர்புரம், அப்புவிளை, சாமிதோப்பு, சாலைப்புதூர், மேலநடுவக்குறிச்சி, பிரகாசபுரம், நல்லூர், வடக்கு ராமசாமிபுரம், பூச்சிக்காடு, பண்டாரபுரம், விஜயனூர், காந்திநகர், விஜயராமபுரம், ஐயர்விளை, சுப்பிரமணியபுரம், தட்டார்மடம், முத்தம்மாள்புரம், கொம்மடிக்கோட்டை, சொக்கன் குடியிருப்பு, உதரத்து குடியிருப்பு, செட்டிவிளை, சித்தன்குடியிப்பு பகுதிகளில் இன்றைய தினம் பொதுமக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முநாதன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் திறந்த வேனில் நின்ற படி பொதுமக்களிடம் அவர் வாக்குகள் சேகரித்தார்.

அவரை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், பொன்னாடை அணிவித்தும், மலர்கள் தூவியும் வரவேற்றனர். அவருடன் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பைக்கில் சென்றபடி பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்தார்.