ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு வருடம் தோறும் 25 பேருக்கு இலவச கல்லூரி படிப்பிற்கான முழு பொறுப்பும் நான் ஏற்றுக்கொள்கிறேன். சாத்தான்குளத்தில் பொதுமக்கள் மத்தியில் ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு வருடம் தோறும் 25 பேருக்கு இலவச கல்லூரி படிப்பிற்கான முழு பொறுப்பும் நான் ஏற்றுக்கொள்கிறேன். சாத்தான்குளத்தில் பொதுமக்கள் மத்தியில் ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 4 தினங்களாக ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள முதலூர், கடாட்சபுரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடாட்சிபுரத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து வருடத்திற்கு 25 மாணவர்களை பொறியாளர்களாக மாற்றுவதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் அவர்கள் பொறியியல் படிக்கும் 4 ஆண்டுகளுக்கும் அவர்களுக்கு படிப்பு செலவு, விடுதி, உணவு என அனைத்தும் செலவுகளையும் நானே செய்வேன் என்றும், அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை பெறவும், அவர்களது குடும்பம் நல்லபடியாக பொருளாதாரத்தில் உயர நான் உறுதுணையாக இருப்பேன். இந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகளாக குடிநீர், சாலைவசதிகள் அனைத்தையும் உங்களுடன் நின்று சீரமைத்து தருவேன் என்று பொதுமக்கள் மத்தியில் பேசினார்.