சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 4 தினங்களாக ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள கடாட்சபுரம், ஆலடித்தட்டு, முத்துகிருஷ்ணாபுரம், வள்ளியம்மாள்புரம், சண்முகபுரம், ஆத்திக்காடு, சொக்கலிங்கபுரம், அன்பின் நகர், வடக்கு நரயன் குடியிருப்பு, சிவநாராயணபுரம், ராமநாதபுரம், அடைக்கலபுரம், ராமசாமிபுரம், பெருமாள் நகர், கள்ளக்குறிச்சி, சொக்கன்விளை, மணிநகர் போன்ற பகுதிகளில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஊர்வசி அமிர்தராஜ் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்தார். அவருக்கு ஒவ்வொரு ஊரில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளித்தனர்.