10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. சாத்தான்குளத்தில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு பேச்சு.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. சாத்தான்குளத்தில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு பேச்சு.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் பகுதிகளான முதலூர் பகுதியில் இன்றைய தினம் ஊர்வசி அமிர்தராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில்,
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் 50 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று விட்டது. திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு எதிரான அலைகள் வீசுகிறது. ஊர்வசி அமிர்தராஜ் தந்தை ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அவர் இந்த தொகுதிக்கு ஏராளமான பணிகளை செய்துள்ளார். அவரது தந்தை வழியில் இவரும் தொடர்ந்து இந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு நற்பணிகளை செய்வார் என்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் வாக்குகள் சேகரித்தார்.