தேர்தல் பணியில் ஆசிரியர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட வாய்ப்பு

இரண்டாவது தேர்தல் வகுப்பு நாளை ( 26.3.2021) நடைபெற உள்ளது. இதில் பெருவாரியான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பங்குபெற உள்ளனர். கொரோனா தொற்று விரைந்து பரவிவரும் இக்கால கட்டத்தில் ஒரே வகுப்பிற்குள் நாற்பதிற்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் பயிற்சிக்காக இருக்கவேண்டிய நிலையில் , அம்பை, பாளையங்கோட்டை, இராதாபுரம், நாங்குநேரி, ஆகிய தொகுதிகளுக்கு காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தேர்தல் பயிற்சி வகுப்பிற்கான காலநேரம் வகுத்திருப்பது தேர்தல் பணியாளர்களை மன, உடல் உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது. பிற தொகுதிகளில் காலை மாலை என்று இரண்டு கட்டமாகவே வகுப்புகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியாளர்களின் நலன் கருதி பயிற்சி நேரத்தை குறைக்க உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.