தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கால் ஆதிச்சநல்லூர் தொல்லியல் தகவல் மையத்தை வெள்ளம் சூழ்ந்தது..

தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கால் ஆதிச்சநல்லூர் தொல்லியல் தகவல் மையத்தை வெள்ளம் சூழ்ந்தது.. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைக்கட்டுகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைக்கு வரும் உபரிநீரை முழுமையாக தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஆதிச்சநல்லூர் தொல்லியல் தகவல் மையத்தை தற்போது தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அந்த கட்டிடத்தில் தான் கடந்த ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து கிடைத்த பொருட்கள் அனைத்தும் உள்ளது.
மேலும் கருங்குளம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.