கருங்குளத்தினை சேர்ந்த தந்தை மகனுக்கு நேசமணி விருது

கருங்குளத்தினை சேர்ந்த
தந்தை மகனுக்கு நேசமணி விருது
முதல்வர் எடப்பாடியார் சார்பில் அமைச்சர் ம.பாண்டியராஜன் வழங்கினார்.

நாடார் சாதனையாளர்களுக்கும் பேராளிகளுக்கும் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாங்காடு கார்த்திக் பேலஸ் ல் நடந்தது. இந்த விழாவில் 100 பேருக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ. முத்து ரமேஷ் நாடார் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கருங்குளத்தில் பனை பொருளில் தலைவர் உருவம் செய்த பால்பாண்டி என்பவருக்கும் ,அவரது மகன் பெருமாளுக்கு காரத்தேயில் பல் சாதனை புரிந்த வகைக்கும் நேசமணி விருதுகள் வழங்கப்பட்டது. விருதுகளை அமைச்சர் ம.பா. பாண்டிய ராஜன் வழங்கினார்.