எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு
தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வுக்கு தமிழ் செம்மல் விருது கிடைத்துள்ளது. இவர் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளை வெளி கொணர பாடுபட்டவர்கள். தாமிரபரணியை பற்றியும் , மேற்கு தொடர்ச்சி மலை குறித்தும், சித்தர்கள் மற்றும் ஜமீன்தார்கள் பற்றி 53 நூல்களை எழுதியுள்ளார். காஞ்சி மாடதிபதி, வேளாக்குறிச்சி ஆதினம், திருவாவடுதுறை ஆதினம் மூலமாக விருது பெற்றவர்கள். 2018 ஆம் ஆண்டு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மூலமாக தமிழ் ரத்னா சிறப்பு விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கரங்களால் பெற்றவர். இந்த வருடம் இவருககு தமிழக அரசின் தமிழ்செம்மல் விருது கிடைத்துள்ளது. இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளன. தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.