கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.

கருங்குளம் வட்டார வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் மூலம் தேசிய நிலையான வேளாண்மை இயக்கம் 2020-21 திட்டத்தின் கீழ் மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளுக்கான பயிற்சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிக்குளத்தில் வைத்து நடந்தது.

இந்த பயிற்றிக்கு கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) தமிழ்மலர் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி தலைமை உரையாற்றினார்.

பயிற்சியில் உழவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் ஹேமலதா ஒருங்கிணைந்த பண்ணைய நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார். மண்ணியல் துறை இணை பேராசிரியர் முனைவர் ஜெபர்லின் பிரவீனா மண்புழு உரம் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினார். உழவியல் துறை இணை பேராசிரியர் ஜோசப் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் தீவனப்பயிர் மற்றும் மரப்பயிர் மேலாண்மை முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த முறைக்கான பொருளாதாரம் மேம்பாடுக்கான தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். தெய்வசெயல்புரம் கால்நடை மருத்துவர் ஆனந்தராஜ் கால்நடையில் வரும் நோய்கள், தடுப்பூசி முறைகள் மற்றும் பால்வளம் பெருக்குவதற்கான தொழில் நுட்பங்களையும் எடுத்துரைத்தார். கால்நடைத்துறை உதவி பேராசியர் முனைவர் குமார் பண்ணையத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறை குறித்து விளக்கி கூறினார்.

மேலும் இந்த பயிற்சியில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பு வளர்ப்புக்கான பண்ணை அமைப்பு முறை மற்றும் வளாப்பு முறைகளை நேரில் கண்டறிந்தனர். பயிற்சியின் முடிவில் கருங்குளம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வ சுந்தரம், திருவேணி, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட இளநிலை ஆராய்ச்சியாளர் சிந்தியா மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.