செய்துங்கநல்லூரில் தாமிரபரணி நாயகன் நயினார் குலசேகரனுக்கு அஞ்சலி தாமிரபரணியை காக்க உறுதி மொழி

செய்துங்கநல்லூரில் தாமிரபரணி நாயகன் நயினார் குலசேகரனுக்கு மூன்றாம் அண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தாமிரபரணியை காக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது.
தாமிரபரணியை காக்க தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் நயினார் குலசேகரன். 92 வயது நிரம்பி இவர் தன து தாமிரபரணியை காக்க இறுதி மூச்சி வரை போராடி வந்தார். தாமிரபரணி நதியும் அதன் உரிமைகளும் என்ற பெயரில் நூலும் வெளியிட்டு வந்தார். மூத்த கம்னியூஸ்ட் தலைவர் நல்லகண்ணுவோடு தாமிரபரணியை காக்க மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் 92 வயது வரை வாழ்ந்த கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை 30 ல் மறைந்தார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செய்துங்கநல்லூர் சந்தை வளாகத்தில் வைத்து நடந்தது. ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து மாலை அணிவித்தார். வல்லகுளம் மணிமுத்து, அரசர்குளம் முருகப்பெருமாள், கொங்கராயகுறிச்சி சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் தாமிரபரணியை பாதுகாக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது.