கருங்குளம் ஒன்றிய குழுத் தலைவரிடம் மனு

கருங்குளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் தலைமையில் ஆழ்வார் கற்குளம் கிளைச் செயலாளர் முருகன் ஒன்றிய பிரதிநிதி அப்துல் அப்துல்கரீம் முன்னிலையில் செக்காரக்குடி ஊராட்சியில் கழிவு நீர் விஷவாயு தாக்கி இறந்த நாலு நபர்களுக்கு அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பொருட் குறிப்பு 19 குறிப்பிட்டபடி ஒரு நபருக்கு தலா ரூபாய் 10 லட்சம் வீதம் இழப்பீடு தொகை மேற்படி இறந்தவரின் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது அதனால் இழப்பீடு தொகை 20 லட்சமாக அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று தாங்கள் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு ஊராட்சியில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்யுமாறும் இச்சம்பவம் போல் வேறு எந்த ஊராட்சியிலும் நடைபெறாத வண்ணம் ஊராட்சி மன்ற தலைவர்களை அறிவுறுத்துமாறு மேலும் இத் துயரச் சம்பவம் 31 பஞ்சாயத்துக்களில் வேறு எந்த ஊராட்சியில் நடைபெற்றாலும் ரூபாய் 20 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக கருங்குளம் யூனியன் ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரனிடம் மனு அளித்தனர் இதுகுறித்து திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கிபாண்டியன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கூறுகையில் கழிவுநீர் விஷ வாயு தாக்கி மரணம் அடைந்தவர்கள் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அரசு பணியினை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த இடங்களில் பணிநியமனம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றும் படி கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கருங்குளம் ஒன்றிய திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன், ஆழ்வார்கற்குளம் கிளைச் செயலாளர் முருகன், ஒன்றிய பிரதிநிதி அப்துல் கரீம், கருங்குளம் ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் கம்மாடிச்சி இசக்கி பாண்டியன், வசந்தி முருகேசன், ராதா மாரியப்பன், மைமூன் அப்துல் கரீம், சுந்தரி குமார், ஆகியோர் சென்று கருங்குளம் ஒன்றிய குழுத் தலைவரிடம் மனுக்களை அளித்தனர்.