செய்துங்கநல்லூரில் எலும்பு உருக்கி நோயால் பாதிக்கப்பட்டவரை அமைச்சர் சரோஜா போனில் விசாரித்தார்.

செய்துங்கநல்லூரில் எலும்பு உருககி நோயால் பாதிக்கப்பட்டவரை அமைச்சர் சரோஜா போனில் நலம் விசாரித்தார். இதுபற்றிய விவரம் வருமாறு.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் & திருமலை நம்பி நாச்சியார் தம்பதியினர். இவர்களது மகன்கள் சின்னத்துரை(45) முருகன்(37) ஆகிய இருவரும் எலும்புருக்கி நோயால் அவதிபட்டு வருகின்றனர். இவர்கள் எழுந்து உட்கார கூட முடியாத நிலையில் படுத்த படுக்கையாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் பொற்றோர்கள் மிக சிரமமான நிலையில் அவர்களை பராமரித்து வருகிறார்கள். இதற்கிடையில் அவரது மகள் முத்துலெட்சுமி மணமுடித்து கொடுத்து, கணவனை பிரிந்த நிலையில் தந்தை குடும்பத்தில் வசித்துவருகிறார்கள். இவருக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இவர்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது. இதை அறிந்தவுடன் நெல்லை மாவட்ட மத தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவகுமார் அந்த குடும்பத்திற்கு தேவையான காய்கனி, மளிகைப்பொருள், அரிசி உள்ளிட்ட அத்தியவாசியமான பொருள்களை தன்னுடைய சொந்த நிதி மற்றும் நண்பர்களிடம் திரட்டிய தொகையை கிருஷ்ணன் வசம் கொடுத்தார். மேலும் தற்போது ஊனமுற்றோர் திட்டம் மூலம் நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் உதவிதொகை வழங்கப்பட்டு வருகிறது. இது வீட்டு வாடகைக்கு உதவுகிறது. ஆனால் அன்றாட செலவுகளுக்கு இந்த குடும்பம் தவித்து வருகிறது. மேலும் சின்னத்துரை மற்றும் அவர் மனைவிக்கு நிறுத்தப்பட்ட உதவி தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த தொகையை தற்போது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறை முலமாக முத்துலெட்சுமிக்கு தையல் மிஷின் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Êசமூகநலத்துறை அமைச்சர் சரோஜா முத்துலெட்சுமியிடம் பேசுவதற்காக, தொலைபேசி இணைப்பு கொடுக்க மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலெட்சுமி, செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்தில் உள்ள கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த முத்துலெட்சுமியிடம் அமைச்சர் போனில் பேசி நலம் விசாரித்தார். அப்போது வட்டார சமூக நல விரிவாக்க அலுவலர் பாக்கிய லெட்சுமி உடனிருந்தார்.