செய்துங்கநல்லூரில் இஸ்லாமியர் ஆர்ப்பாட்டம்

செய்துங்கநல்லூரில் டெல்லி காவல்துறை கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் மாவட்ட தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் யூனிட் தலைவர் அபு வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் சாகுல்அமீது உஸ்மானி கண்டன உரையாற்றினார். மாவட்ட பேச்சாளர் காயல் அப்துர் ரகுமான் உள்பட பலர் பேசினர்.

இதில் 200 பெண்கள் உள்பட 500ககு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி பி.எப்.ஐ தலைவர் செய்யது அலி கரீம் நன்றி கூறினார். இந்த ஆர்பாட்டத்தில் செய்துங்கநல்லூர், ஆறாம்பண்ணை உள்பட சுற்று பகுதியில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.