செய்துங்கநல்லூரில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் முகாமிற்கு செய்துங்கநல்லூர் செயிண்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு காணோலி காட்சிகள் திரையிடப்பட்டது. செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் இயந்திரவியல் துறைத்தலைவர் ஆறுமுகசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் இயந்திரவியல் துறை ஆசிரியர்கள், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.