ஆறாம்பண்ணையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா

ஆறாம்பண்ணையில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.

பாளையங்கோட்டை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.

கல்லூரி முதல்வர் டாக்டர் முகமது சாதிக் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் முனைவர் அப்துல் ரகுமான் திட்ட அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம் சேக் அப்துல் காதர், கல்லூரி நூலகர் சரவணக்குமார், ஜமாத் செயலாளர் மொன்னா முகம்மது, துணை தலைவர், கனி, காஜா முகைதீன், பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர், 1வது வார்டு உறுப்பினர் இப்ராகீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திட்ட அலுவலர் முனைவர் தமிழினியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திட்ட அலுவலர் பேராசிரியர் சாகுல் அமீது நன்றி கூறினார்.