செய்துங்கநல்லூரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

செய்துங்கநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, மாவட்ட நலகல்வியாளர் அந்தோணி சாமி உள்பட பலர் பேசினர். வட்டார சுகாதார ஆய்வாளர் பெரியசாமி வரவேற்றார். மருத்துவ மில்லா மேற்பார்வையாளர் இளங்கோராஜன், சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், சண்முகபெருமாள், சீனிவாசன் , முத்துகுமார், ஜாஹீர் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டீபன் ரத்தின குமார், லெட்சுமணன் அனைத்து ஊராட்சி செயலாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.