வல்லநாடு அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

வல்லநாடு அருகே உள்ள அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி மொழித் திட்ட பணியாளர்களிடையே விழிப்புணர்வு முகாம் வல்லநாடு அகரம் கிராமத்தில் நடந்தது. வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன் தலைமை வகித்தார். வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சமூக ஆர்வலர் நயினார் வரவேற்றார்.
வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் பேசினார்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். முகாமில் பணித்தளப் பொறுப்பாளர்கள் இளவரசி , சுப்புலக்ஷ்மி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி மொழித் திட்ட பணியாளர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு இணைந்து செய்திருந்தது.