வல்லநாடு பகுதியில் பயணிகள் தாகம் தணிக்க இலவச நீர் – பசுமை தமிழ் தலைமுறை ஏற்பாடு

வல்லநாடு பகுதியில் பயணிகள் தாகம் தணிக்க இலவச நீர் பந்தலை பசுமை தமிழ் தலைமுறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கோடை நெருங்கும் வேளையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றன. வெயில் நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள காத்திருக்கும் பேருந்து பயணிகளின் தாகம் தணிக்க ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் மண் பானையில் குடிநீர் வைக்க பசுமை தமிழ் தலைமுறை ஏற்பாடு செய்து வருகிறது.

முதல் கட்டமாக திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களான வசவப்புரம், முறப்பநாடு, வல்லநாடு, ஆகிய பஸ் நிலையத்தில் மண் பானையில் இலவச குடிதண்ணீர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுகன் கிறிஸ்டோபர், கலியாவூர் பரமசிவன் உள்பட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இளைஞர்கள், பயணிகளின் தாகம் தணிக்கும் முயற்சியை முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் உள்பட பலர் பாராட்டினர்.