வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் சித்தர் பீடத்தில் தை பூச திருவிழா

வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள், அருள் தரும் செந்தில் விநாயகர் ஆலயம் வருஷாபிசேகம் மற்றும் தை பூச திருவிழா நடந்தது.

இதையட்டி 7 ந்தேதி காலை 10மணிக்கு திருஅருட்பா அகவல் பாராயணம், காலை 12.30 மணிக்கு அருள் ஆனந்த செந்தில் வினாயகப்பெருமானுக்கு மகா அபிசேஷகம் நடை பெற்றது. மதியம் 1 மணிக்கு அலங்காரம், மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடை பெற்றது.

8 ந்தேதி சனிக் கிழமை காலை 6 மணிக்கு அபிசேகங்கள், 7.15 மணிக்கு கூழ் பூஜை மற்றும் தீபாரதனை காலை 10 மணிக்கு அகவல் பாராயணம், மதியம் 12.15 மணிக்கு தை பூச பூஜை நடந்தது. தொடர்ந்து திருஅருட்பா, தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு உடன் கூடிய ஜோதி வழிபாடு , மகாதீப ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. 6 மணிக்கு கோபூஜை, மாலை 6.30 மணிக்கு அருட்ஜோதி ஆனந்த சபையில் 1008 தீபஜோதி வழிபாடு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மங்கள பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் தொண்டர் குலம் செய்திருந்தனர்.