மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது.

ஆதிச்சநல்லூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் திருடிய வாலிபரை போலிசார் கைது செய்தனர்.

செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்லையில் செய்துங்கநல்லூர் எஸ்.ஐ முத்துக்கிருஷ்ணன் தலைமையில் போலிசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது ஆதிச்சநல்லூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்திக்கொண்டிருந்த ஆதிச்சநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் வினோத் (36) என்பரை போலிசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரனை நடத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.