ஆதிச்சநல்லூரில் அனுமதி இன்றி தோண்டிய குழி. மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு.

ஆதிச்சநல்லூரில் அனுமதியின்றி தோண்டிய குழியை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி மேற்கொள்ள உள்ள பகுதியில் ஜேசிபி மூலம் சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஏராளமான முதுமக்கள்தாழிகள் உடைந்தது. இதனால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு ஊடகங்களில் இதுகுறித்து செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று காலை மத்திய தொல்லியல்துறை அதிகாரி எத்திஸ்குமார் ஆதிச்சநல்லூரில் ஜேசிபி மூலம் தோண்டப்பட்ட குழியினை பார்வையிட்டார். மேலும் அந்த குழியில் உடைந்த முதுமக்கள் தாழிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இந்த பகுதியில் சட்டவிரோதமாக இந்த குழி தோண்டப்பட்டுள்ளது. எனவே இந்த குழியினை உடனே மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.