ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா

ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது.

இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் திருவேங்கடாச்சாரி தலைமை வகித்தார். செயலர் ஆதிநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் டாக்டர்.இராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியர் இராஜா வரவேற்றார். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் சுவாமி நாதன், பள்ளி இயக்குனர்கள் சிவகளை பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன், நரசிம்மன், முன்னாள் மாணவர்கள் அபிசாலி, கமாலுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இதையட்டி விளையாட்டு, இலக்கிய மன்ற, இராகவ காவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் சிவசங்கர ராமன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர், செயலர் நிர்வாக்க குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள் அலுவலகப்பணியாளர்கள் மாணவமாணவிகள் செய்திருந்தனர்.