ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மானாவாரி விவசாய பணிகள் விறு விறுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் சுற்றுவட்டார பகுதிகளான கருங்கடல், மீரான்குளம், கட்டாரிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி நிலக்கடலை விவசாய பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மானாவாரி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்வற்றி நிலங்கள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வானம் பார்த்த பூமியான விவசாய நிலங்களில் மானவாரி விவசாயத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். நிலக்கடலை உளுந்து விதைப்பு பணிகளை தொடங்கிவிட்டனர். மழை பெய்ததை தொடர்ந்து டிராக்டர் மூலம் உழவு செய்து பின்னர் கடலை, உளுந்து, பச்சைப்பயிறு உள்ளிட்ட பல பயிர் வகைகளை விதைக்கின்றனர். வறண்டு கிடந்த நிலத்தில் திடீரென பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.