செய்துங்கநல்லூரில் குளத்துக்கரையில் பனங்கொட்டை விதை நடும் விழா

செய்துங்கநல்லூரில் உள்ள சிவன்கோயில் குளக்கரையில் பனங்கொட்டை விதை நடும் விழா நடந்தது.
தமிழகம் முழுவதும் பனங்கொட்டை விதை நடும் நிகழ்வு நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் இளைஞர்கள் இணைந்து செய்துங்கநல்லூர் குளத்துக்கரையில் பனங்கொட்டை விதை நடும் நிகழ்வை நடத்தினர். இதில் முதல் கட்டமாக 500 பனங்கொட்டை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்சிக்கு எம்.எம். நடுநிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைராஜ் தலைமை வகித்தார். நெல்லை இன்ஸ்பெக்டர் சிவகுமார் பனங்கொட்டை விதைகளை நடும் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாயாண்டி, மூக்கன், நம்பி, ராஜா, முத்து , மனோஜ், குட்டி , ஸ்ரீ, சுந்தர், சங்கர், சுப்பிரமணி, குருகிருஷ்ணா, ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.