தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணி 17 ந்தேதி துவங்குகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றினை சுத்தப்படுத்தும் பணியை வருகிற 17 ந்தேதி முதல் துவங்க மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி இசைந்துள்ளார். இதற்காக நம் தாமிரபரணி அறக்கட்டளை மற்றும் செல் எங் இந்தியா அறக்கட்டளையும் இணைந்து பணி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். அவர்கள் மருதூர் அணை, சென்னல்பட்டி , முறப்பநாடு, பக்கபட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். இவர்கள் இயந்திரங்கள் மூலம் எப்படி தாமிரபரணியை சுத்தப்படுத்துவது. கல்லூரி மாணவர்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பது உள்பட பல ஆலோசனைகளை செய்தனர். இந்த ஆலோசனையில் அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குனர் சக்திநாதன், நம்தாமிரபரணி நல்லபெருமாள், வித்யாசாகர், எழுத்தாளர், முத்தாலங்குறிச்சி காமராசு, சிகாமணி, கல்யாண ராமன் உள்பட செல் எங் இந்தியா அமைப்பினர் கலந்துகொண்டனர்.
17 மற்றும் 18 ஆகிய நாள்களில் இயந்திரங்கள் மூலம் தாமிரபரணியை சுத்தப்படுத்துதல், 19 ந்தேதி கல்லூரி மாணவ மாணவிகள் மூலமாக மரக்கன்று நடுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துல் ஆகியவை நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர் சந்திப் நந்தூரி துவக்கி வைக்கிறார்.