செய்துங்கநல்லூரில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

செய்துங்கநல்லூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ª டங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி சிலுவை பேரணியை துவக்கிவைத்தார். பேரணி கால்நடை ஆஸ்பத்திரி முன்பிருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தினை வந்தடைந்தது. அதன் பின் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுக சேகர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தளாளார் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.