ஆதிச்சநல்லூரில் ஜெர்மனி தமிழ்மரபு அறக்கட்டளையினர் சுற்றுபயணம்

ஆதிச்சநல்லூரில் ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்தனர். ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையும் சதக்கத்துல்லா கல்லூரியும் இணைந்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பன்னாட்டுக் கருத்ரங்கத்தினைகடந்த 4 தேதி நடத்தியது. இதில் தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் பல அறிஞர்கள் பேசினர்.
இரண்டாம் நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையினர் சுமார் 50பேர் கொண்ட குழுவினர் சுற்று பயணம் செய்தனர். இவர்கள் கொற்கை, புன்னகாயல், சாயர்புரம், ஆதிச்சநல்லூர் பகுதியில் சென்று தமிழ் மரபுகள் குறித்த ஆய்வு செய்தனர். ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடந்த இடம் உள்பட இடங்களில் அவர்கள் பார்வையிட்டனர். அதன் பின் ஆதிச்சநல்லூர் தொல்லியல் குறித்து கலந்துரையாடல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ மரபு கட்டளை ஜெர்மனி தலைவர் சுபாஷிணி தலைமையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொல்லியல் துறை சசிகலா ஆகியோர் பேசினர் இந்த நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் அனுசியா, மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மேனாள் பேராசிரியர் நாராயணன் கண்ணன், பாண்டிசேரி டாக்டர் சிவ.இளங்கோ, மதிவாணன், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.