மணக்கரையில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டசத்து மாதவிழா

மணக்கரையில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டசத்து மாதவிழா நடந்தது.
மணக்கரை டி.என்.டி.டி.எ நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு துணை இயக்குனர் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மேரி விக்டோரியா பியட்ரிஸ் வரவேற்றார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை பிரின்ஸி பியூலா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாட்ட தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி , அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், சமுதாய சுகாதர செவலியர் சாந்த குமாரி, பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட காசநோய் மையம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு இணைந்து செய்திருந்தது.